முதுமையிலும் இளமையா தெரியணுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுமையிலும் இளமையா தெரியணுமா?

முதுமையிலும் இளமையா தெரியணுமா?






மாம்பழம் கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கேல் கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. 




எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம். பசலைக் கீரை ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன. ப்ராக்கோலி பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது. 




முட்டை முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது. குடைமிளகாய் குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன. 



பால் பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும். தக்காளி தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. 




எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம். சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். 




தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

No comments:

Post a Comment

Please Comment