Diksha 'தீக்ஷா' செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Diksha 'தீக்ஷா' செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம்

'தீக்ஷா' செயலிக்கு அமோக வரவேற்பு: வியக்க வைக்கும் புள்ளி விபரம் 


மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிமுகப்படுத்திய, 'தீக்ஷா செயலி'க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.புதிய பாடத்திட்டத்தின் கீழ், 'க்யூ.ஆர்.,' கோடு (Quick Response Code) மூலமாக கற்பிக்கும் முறை நடப்பாண்டு அறிமுகமாகியுள்ளது. 

இதன்படி, ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பெற்றோரும் பாடத்திட்ட கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.இதற்கு வசதியாக மத்திய அரசு, 'தீக்ஷா' ( DEKSHA APP) எனும் மொபைல் செயலியை வடிவமைத்துள்ளது. இதில் சி.பி.எஸ்.இ., முதல் அனைத்து மாநில பாடதிட்டங்கள், வகுப்பு மற்றும் பாட வாரியாக பாடநுால்கள், பயிற்சி தேர்வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட்டல் வீடியோ முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


ஆசிரியர்கள் வழக்கமான முறையில் பாடம் நடத்தியதும், அப்பாடத்தில் உள்ள, 'க்யூ.ஆர்.,' கோட்டை மொபைல் அல்லது, 'டேப்' எனும் கையடக்க கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், அப்பாடம் தொடர்பான பாடல், வீடியோக்கள் திரைக்கு வரும். இதனை மாணவருக்கு காண்பித்து எளிமையாக பாடம் நடத்தலாம். மாணவர்களும் வீட்டிலே மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்பெற முடியும்.இச்செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறையின், 'தீக்ஷா' திட்ட குழு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.



இதன்படி, நடப்பு கல்வியாண்டு (2019-20) துவங்கிய மூன்று மாதங்களில், தமிழகத்தில் மட்டும், 50 லட்சத்திற்கு மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2 கோடி முறை, 'க்யூ.ஆர்.,' ஸ்கேன் செய்து பயன்பெற்றுள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக, கல்வித்துறையினர் கூறினர்.

No comments:

Post a Comment

Please Comment