திறமையை கண்டறிவதில் இன்டர்நெட் INTERNET எவ்வாறு உதவுகிறது
தனித்துவமான திறமை படைத்த எவரும், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் டிவி ஷோவில் வாய்ப்பு பெற, ஆடிஷனுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருந்தது நினைவில் இருக்கிறதா? இப்போது அந்த வரிசை மிகவும் சுருங்கியிருக்கிறது. இன்டர்நெட் பல கதவுகளை திறந்திருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறமையை காட்ட மேடை ஏற்படுத்தி, அதன் மூலம் பிரபலமடைவதற்கான நம்பிக்கையை தந்துள்ளது.
பொழுதுபோக்கின் முகம் தற்போது முற்றிலும் மாறியிருக்கிறது! திறமை இருக்கிறதா? அதிர்ஷ்டக் காற்று உங்கள் மீது வீச நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கேமரா முன் நின்று, உங்கள் திறமையை பதிவு செய்து, அதை இன்டர்நெட்டில் வெளியிடுங்கள். ஒட்டுமொத்த இன்டர்நெட்டும் ஆடிஷன்தான்.
இன்டர்நெட் மூலம் உலகில் லட்சக்கணக்கானோர் தங்கள் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் பிரபலமாகி விடுகிறார்கள்.
#டிரெண்டிங்
நடனமாடக் கூடிய ஒரு குழந்தையோ அல்லது நல்ல இன்னிசை பாடக் கூடிய ஒரு பாட்டியோ அல்லது ருசியாக சமைக்கத் தெரிந்த ஒரு இல்லத்தரசியோ என யாராக இருந்தாலும் அவர்களின் திறமை, பரந்துவிரிந்த பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென விரும்பினால், அதை இன்டர்நெட்டில் வெளியிடுவதே மிக எளிதான வழியாகும். பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், லிங்க்டுஇன், இன்ஸ்டாகிராம் மற்றும் புதிய கலக்கல் வரவான டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் உதவியுடன் பலரும் உடனடி புகழ் மற்றும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளனர்.
Read this also
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜஸ்டின் பீபர், கேட் அப்டன், ஸ்வான் மெண்டஸ் மற்றும் அலிசியா காரா போன்றவர்கள் கூட அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி தந்த இன்டர்நெட்டுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஓர் கனவு இருந்தால்
திறமையாளர்களுக்கான புதிய வேட்டையாடும் களம் இன்டர்நெட். நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்தாலும் அல்லது வித்தியாசமாக இருந்தாலும், நீங்கள் வைரலாகி, ஒரே இரவில் பிரபலமாகி விட முடியும்.
பலதரப்பட்ட இணையதளங்களும், செயலிகளும் இணையத்தில் தனிநபர்களும் கட்டாயம் இடம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தர உதவுகின்றன.
உலகம் முழுவதும் உள்ள பலதரப்பட்ட கலைஞர்கள் தங்களுக்கான ரசிகர் மன்றம் போன்ற பாரம்பரிய வழிமுறைகளுக்கு பதிலாக, மாறிவரும் இன்டர்நெட் உலகின் வாயிலாக ரசிகர் தளங்களை உருவாக்கி திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். எனவே, தரமான கேமரா கொண்ட ஸ்மார்ட்போனில் சிறந்த இன்டர்நெட் இணைப்பு உங்கள் அனைவருக்கும் அவசியமாகிறது.
இதற்கு Airtel போன்ற விரைவான நெட்வொர்க் உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், வீடியோக்களை பதிவு செய்து அவற்றை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யலாம்.
எல்லாம் உங்கள் சவுகரியம்
இன்டர்நெட்டில் நம் திறமையை காட்டுவதால், ஆடிஷன் தொந்தரவுகளை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, பலபேர் மத்தியில் நம் திறமையை வெளிப்படுத்துவதில் உள்ள பயத்தையும், பதட்டத்தையும் தவிர்த்திட முடியும்.
தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டுமென நினைப்பவர்கள், அவர்களுக்கு சவுகரியமாக வீட்டிலிருந்தபடியே வீடியோவாக பதிவு செய்து அதை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்து, இந்த உலகமே அதை பார்க்கச் செய்து விடலாம். நம் திறமைகள், பரந்துவிரிந்த பார்வையாளர்களையும், தொலைதூரத்தில் இருப்பவர்களையும் சென்றடையும் வாய்ப்பை இன்டர்நெட் வழங்குகிறது.
செயல்மிகு பயனாளராகுங்கள்
உங்களுக்கு புகழ் பெற்றுத்தருவதைத் தவிர, ஓர் பிரபலமான, செல்வாக்குமிக்க இன்டர்நெட் ஸ்டாராக இருப்பவரை செயல்மிகு பயனாளராக உயர்த்தவும் இன்டர்நெட் உதவுகிறது. தற்போது ஏராளமான ஆன்லைன் பிரபலங்கள், பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களின் பொருட்களை ஊக்குவித்தும், தங்களை பின்தொடர்வோரின் அனுபவங்களை பகிர்ந்தும் பணம் சம்பாதிக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்த வரை, ஆன்லைன் செயல்மிகு பயனாளர்கள் மூலம் விளம்பரம் செய்வது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், சராசரியாக மூன்றில் இரண்டு பங்கு பிராண்டிங் நிறுவனங்கள், செயல்மிகு பயனாளர் மூலம் விளம்பரம் செய்ய ஓராண்டுக்கு தலா ஒரு பிராண்டுக்கு $50,000 செலவிடுகின்றன.
அதாவது, ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய்க்கும் மேல். பஷ்ஷோகா இன்ஃபிளியன்சர் மார்க்கெட்டிங் அவுட்லுக் 2019 ஆய்வின்படி, கடந்த 2018ம் ஆண்டில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர், லிங்கிடுஇன், வாட்ஸ்அப், யூடியூப், கோரா, டிக்டாக், பிளாகிங் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவையே மிக முக்கியமான செயல்மிகு பயனாளர் சந்தைப்படுத்துதல் சேனல்களாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய இணையமானது, திறமையான, வணிக ஆர்வமுள்ள மக்களுக்கான ஓர் வாகனமாக மாறி வருகிறது. அதில் உங்கள் சவால்களுடன் பயணித்து, அதிர்ஷ்டத்திற்கான நம்பிக்கை உங்கள் மீது பிரகாசிக்கச் செய்ய முடியும்.

No comments:
Post a Comment
Please Comment