Sister Nivedita நினைவு தினம் இன்று. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Sister Nivedita நினைவு தினம் இன்று.

இந்தியாவில் பெண் கல்விக்காக பாடுபட்ட சகோதரி  ,முதல் இந்திய தேசியக்கொடியை உருவாக்கிய சுவாமி விவேகானந்தரின்முதன்மை சீடரும், சமூக சேவகியுமான,
Sister Nivedita
(Margaret Elizabeth Noble)
நினைவு தினம் இன்று.
( 13   அக்டோபர்  1911 )



இவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர் சுவாமி விவேகாந்தரின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு இந்தியா வந்து சுவாமி விவேகாந்தரால் நிவேதிதா என்ற பெயர் சூட்டப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தில் சன்யாசினியாகி சேவை செய்தவர்.

இவர் உருவாக்கிய முதல் இந்திய தேசியக்கொடியை கல்கத்தாவில் வங்காளப்பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின்போது சுதந்திரப் போராட்டவீரர், Sachindra Prasad Bose ல்,  கல்கத்தா   (ParsiBagan  Square ) பார்சிபகான் சதுக்கத்தில் 1906  ஆகஸ்ட் 07 ல் ஏற்றப்பட்டது

கல்கத்தா மக்களை ’பிளேக்’கொள்ளை நோய் தாக்கியபோது வசதிமிக்கோர் நகரை விட்டு வெளியேற, ஏழைகள் செய்வதறியாது கலங்கி நின்றனர். சுவாமி விவேகானந்தர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளில் இறங்கினார். துறவிகளைக் கொண்டு தாம் அமைத்த நிவாரணக் குழுவிற்கு நிவேதிதையை தலைவியாக்கினார்.


நிவேதிதை, நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மைப் படுத்தவும் இளைஞர் குழு ஒன்றையும் அமைத்தார். இரவீந்திரநாத் தாகூர், ஜெகதீஷ் சந்திர போஸ் முதலானவர்களுடன் நண்பராக இருந்த இவர், பின்னாளில் அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார்.

No comments:

Post a Comment

Please Comment