மாநகராட்சிப் பள்ளிகளில்
மாண்டிசோரி கல்வி முறையை கொண்டுவர நடவடிக்கை
சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் மாண்டிசோரி கல்வி முறையை கொண்டுவர மாநக ராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கள் என 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 200 பள்ளி களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மழைலையர் வகுப்புகளில் மாண்டி சோரி கல்வி முறையை கொண்டு வருவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே மாநகராட்சி பள்ளி களில் உள்ள மழலையர் வகுப்பு களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு மாண்டிசோரி கல்விமுறை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், மழலையர் வகுப்பில் மாண்டிசோரி கல்வியின் தாக்கத்
தை உணர்ந்த மாநகராட்சி ஏற்கெனவே பயிற்சி பெற்ற, 38 பள்ளிகளில் பணிபுரியும் 73 ஆசிரியர்களுக்கு நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் அக்டோபர் 22-ம் தேதி வரை புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி குழந்தைகளின் மன நிலையை புரிந்துக்கொள்வதில் தொடங்கி, ஆசிரியர்களின் கடமை கள், வகுப்பறை நிர்வாகம், மாண்டி சோரி உபகரணங்களை கையாளு தல், அன்றாட வாழ்வியல், கணினி செயல்பாடுகள் மற்றும் மொழி ஆளுமைத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதாகவும் இருந்தது. இப் பயிற்சி படிப்படியாக அனைத்து மழலையர் வகுப்பு ஆசிரியர் களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், சைதாப் பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாண்டி சோரி கல்வி முறையில் கற்பிக்கப் படுவதை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பி.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
Please Comment