*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 கார்த்திகை 20 ♝ & 6•12•2019*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலைவேளையில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்ற பெருந்திரள் முறையீடு
🔥
🛡புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாகவும் ; மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் : நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
🔥
🛡தமிழ் படிக்காத தமிழாசிரியர்கள் - பட்டியல் எடுக்கும் தமிழக கல்வித்துறை : தாய் மொழியான தமிழ் மொழியை உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் மொழிப் பாடமாக எடுத்து படிக்காமல் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களின் பெயர் பட்டியலை சேகரித்து அனுப்ப உத்தரவு.
🔥
🛡கட்டாய ஓய்வு என வரும் தகவல்கள் உண்மையில்லை - தமிழக அரசு விளக்கம்
🔥
🛡6 - 8ஆம் வகுப்பில் ஒழுக்கக் கல்வி விருப்ப பாடம் - CBSE சுற்றறிக்கை : இது தொடர்பாக, ராமகிருஷ்ணா மிஷன் பாடத் திட்டங்களை உருவாக்கியுள்ளது ; அதனை விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
🔥
🛡மத்திய அரசு பணிகளுக்கு பொதுத் தகுதி தேர்வு (CIT) என்ற பெயரில் UPSC, SSC, RRB ஆகியவற்றை இணைத்து ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் : இதுகுறித்து ஒரு மாதத்திற்குள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், தேர்வர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு : டிசம்பர் 9 முதல் 19 வரை
மாவட்டம் வாரியாக ஆய்வு கூட்டம் சுற்றுப்பயணம் - அட்டவணை வெளியீடு.
🔥
🛡அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (9-12 வகுப்பு) மனவளக்கலை ( யோகா கல்வி) இலவசமாக வழங்க உலக சமுதாய சேவா சங்கத்திற்கு திருநெல்வேலி மாவட்ட CEO அனுமதி.
🔥
🛡பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க 2020 ம் ஆண்டு முதல் பிபிசி (Pariksha pe charcha) என்ற
புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தகவல்.
🔥
🛡மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வு டிசம்பா் 31-ஆம் தேதி நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், காவலர் உட்பட 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை முடிவு : விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்ததும் பணியாளர் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.
🔥
🛡உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட தேர்தல் படிவங்களை அந்தந்த BDO-விடம் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தல்
🔥
🛡2020 நீட் தேர்வுக்கு பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் தகவல்
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*
No comments:
Post a Comment
Please Comment