2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியல்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியல்!

2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியல்!



இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். 

சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை.இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 iloveyou 111111 123123 சென்ற ஆண்டு இரண்டாம் இடம் பிடித்திருந்த `password' இந்த ஆண்டு நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

வருடா வருடம் வெளிவரும் இந்தப் பட்டியலில் பெரிதாக மாற்றம் வருவதேயில்லை. `அதெல்லாம் எதுக்கு மாத்திட்டு' எனச் சிலர் கேட்கலாம், ஆனால், இது மிகவும் ஆபத்தான டிரெண்ட். பாஸ்வேர்டுகள் என்பது நம்முடைய தகவல்கள் பிறருடைய கைகளுக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் அமைக்கக்கூடிய பாதுகாப்பு வளையம்.

சாதாரண தகவல்தானே என நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. தேர்தலின் முடிவுகளை மாற்றும் அளவுக்குத் தகவல்களுக்கு வலிமை உண்டு. ஏதாவது ஒரு கணக்குக்கு பாஸ்வேர்டு தேர்ந்தெடுக்கும்போது எண்கள், எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் என அனைத்தும் கலந்த கலவையாகத் தேர்ந்தெடுங்கள். இதைக் கணிப்பது நடக்காத காரியம். 

உதாரணமாக `k&e24@62' போன்ற பாஸ்வேர்டுகளை செட் செய்யுங்கள். இன்று நாம் பல கணக்குகள் வைப்பதால் இதை நினைவில் வைப்பது கடினம்தான். அதனால் இதற்கென இருக்கும் பிரத்யேக சேவைகளான lastpass, 1password போன்ற சேவைகளைப் பயன்படுத்துங்கள். பாஸ்வேர்டுகள் நம் தகவல்களின் பாதுகாப்பு அரண். அதை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.


List of the worst used passwords in 2019! 

This year Splash Data Company has released its list of the most used and easily predictable common passwords worldwide. Annually, the company publishes a list of passwords that are so common and easily predictable by others. 

There is no big difference between last year's list and this year's list. 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 iloveyou 111111 123123 Last year, `password 'was ranked fourth this year. This list, which comes out year after year, does not change much. Some may ask, "What is it all about?" 

Passwords are a security ring we can set up so that our information does not go into someone else's hands. Information has the power to change the outcome of elections. When selecting a password for an account, select a combination of numbers, letters and special codes. It is impossible to predict this. 

For example set passwords like `k & e24 @ 62 '. This is difficult to remember because we have so many accounts today. So use existing services such as lastpass and 1password. Passwords are the bulwark of our information. Choose it carefully.

No comments:

Post a Comment

Please Comment