2019ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் இதுதான்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் இதுதான்!

2019ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் இதுதான்!



ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக மாறியுள்ளது. 2019 மூன்றாம் காலாண்டில் 3 சதவீத பங்கை ஐபோன் எக்ஸ்ஆர் கைப்பற்றியுள்ளது. மேலும், செப்டம்பர் 2018ன் நான்காம் காலாண்டு முதலே ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன், விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது. 

எக்ஸ்ஆர் மட்டும் மொத்த ஆப்பிள் பொருட்களின் விற்பனையில் 25% மேலாக வருவாயை ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலுமே விற்பனையில் எக்ஸ்ஆர் முதல் இடத்தில் உள்ளது. அதேபோன்று ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், ஐபோன் 11 மாடலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. 

மேலும், ஓப்போ நிறுவனத்தின் ஏ9, ஏ5எஸ், ஏ5 ஆகிய மூன்று மாடல்களும் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. ஸியோமியை பொறுத்தவரை, ரெட்மி 7ஏ மாடல் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. ஸியோமியின் மொத்த விற்பனையில்ரெட்மி 7ஏ, 50% வருவாயை எட்டியுள்ளது. 

இருப்பினும், முதல் 10 மாடல்களின் மொத்த மொத்த வருவாய் முந்தைய காலாண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


This is the best selling smartphone in 2019!


Apple iPhone XR model to become the best-selling smartphone in the world in the third quarter of 2019. IPhone XR has acquired a 3% share in the third quarter of 2019. Moreover, the iPhone XR smartphone has been making a special mark in sales since the fourth quarter of September 2018, according to Counterpoint Research. 

XR alone generates over 25% of total Apple products sales. XR is the first in sales of all branches of Apple. Likewise, in the overall smartphone sales, the iPhone 11 is also in the top 10. In addition, Oppo's A9, A5S and A5 were the top three models in sales. 

As for Siyomi, the Redmi 7A model is in the top 10. Redmi 7A, which accounts for 50% of total sales of Siyomi. However, overall revenues for the top 10 models fell 30 percent from the previous quarter, according to data released by Counterpoint Research.

No comments:

Post a Comment

Please Comment