சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி

சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி 

நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை 19 நாட்களில் சிபிஎஸ்இ வெளியிட் டுள்ளது. 

 இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரிய ராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

அதன் படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மொத்தம் 2 தாள் களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர் கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 

 அதன்படி நடப்பு ஆண்டுக் கான சிடெட் தேர்வு, நாடு முழு வதும் 2,935 மையங்களில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில் சிடெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 23-ம் தேதி வெளி யானது. 

தொடர்ந்து சிபிஎஸ்இ வரலாற்றிலேயே முதன்முறை யாக வெறும் 19 நாட்களில் சிடெட் தேர்வு முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத் தில் நேற்று வெளியிடப்பட் டுள்ளது. இந்த தேர்வை எழுதியவர் களில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் (22.55%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 9 பேர் மாற்றுப் பாலினத் தவர்கள் ஆவர். தேர்ச்சி பெற்ற வர்களுக்கான சான்றிதழ் விரை வில் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்படும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

22.55 per cent passed the CTET Exam ResultsCBSE has released the Central Teacher Eligibility Results written by around 24 lakh people across the country in 19 days.According to the Right to Free Compulsory Education Act, all types of schools are required to qualify for the teacher qualification conducted by the Central and State Governments.

Accordingly, the Central Teacher Eligibility Test (CTET) is conducted twice a year. This selection consists of a total of 2 sheets. Those who pass the first paper can serve as the intermediate teachers and the candidates who pass the second paper as the graduate teachers. Accordingly, the current year's CITET exam was held on August 8 at 2,935 centers across the country. This exam was written by 24 lakhs 5 thousand 145 graduates. In this case, the answer to the choice of citadel was revealed on the 23rd. For the first time in the history of CBSE, the CDT exam results in just 19 days www. cbse.nic.in has been released yesterday. Of the total of 5 lakhs 42 thousand 285 (22.55%) who passed this examination. Nine of them are transgender people. The Certificate of Apprenticeships will be posted on the Quick Arrow website. Department officials said the certificate is valid for up to 7 years.


No comments:

Post a Comment

Please Comment