இன்றைய செய்திகள்
24.12.19(செவ்வாய்க்கிழமை)
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜன. 3ஆம் தேதி திறக்கப்படும்_
- பள்ளிக்கல்வி இயக்குநர்
🍒🍒பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு ஜன்வரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது
🍒🍒DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு
🍒🍒நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் விபரங்களை கல்வித்துறை கணக்கெடுக்க தொடங்கியுள்ளது
🍒🍒அறநிலையத்துறை சார்பில் முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த வேண்டும் என்று கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்
🍒🍒கண்காணிப்பில் ஆசிரியர்கள் சொல்லித்தருவதை முன்கூட்டியே பதிவிட வேண்டும் கற்பிக்கும் திறன் கல்வித்துறை மதிப்பீடு செய்யும்
நாளிதழ் செய்தி
🍒🍒மத்திய அமைச்சர்களின் கடந்த ஆறு மாத செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு. வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறைகளில் முக்கிய கவனம்.
🍒🍒உள்ளாட்சித் தேர்தலுக்காக பொது இடங்களில் விளம்பரம் செய்யக் கூடாது. உரிமையாளரின் ஒப்புதல் பெற்றிருந்தாலும் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
🍒🍒கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
🍒🍒ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு (2020) சம்பளமாக 2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.14.5 கோடி) உள்பட பல்வேறு வழிகள் மூலம் ரூ.2788 கோடி ரூபாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.*
🍒🍒தமிழகத்தில் விறுவிறுப்படைகிறது உள்ளாட்சித் தேர்தல் களம். மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர வாக்குசேகரிப்பு.
🍒🍒வலி நிவாரணி மாத்திரையால் 2,00,000-க்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் இளைஞர்கள் பாதிப்பு, அமெரிக்க ஆய்வில் தகவல்
🍒🍒வட்டாரக்கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு ஜன.9-க்குள் விண்ணப்பிக்கலாம்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹வரும் ஆண்டில் புதிய வேலைகளுக்கு வாய்ப்பில்லை - நிபுணர்கள் கணிப்பு
👉தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையால், அடுத்த ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்._
இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொழில் நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகியதால், ஆட்குறைப்பு நவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபொருளாதார மந்த நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்._
அத்துடன் வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பெரிதும் இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக ஆட்களை எடுப்பதற்கு பதிலாக, இருக்கும் ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. 2020ல் முதலீடுகளும், நுகர்வும் அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றனர்._
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹Emis பணிகள் மற்றும் கணினியில் செய்யும் வேலைகள் அனைத்தும் செல் போனிலே இனி செய்து கொள்ளலாம்
👉ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
👉இனி laptop தேவை இல்லை.laptop-இல் open ஆகும் அனைத்து பக்கங்களும் இனி நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் open ஆகும். அதற்கு தேவை puffin web browser எனும் apps........ எப்படி install செய்வது & settings-இல் ஒரு மாற்றம் செய்வது?.............
1.Google Play Store...➡ puffin web browser....➡ install. 2.Apps Open...➡click 3 dots...➡ click settings🔆...➡ click Webpage preference....➡ click Request desktop site.... அவ்வளவு தான்.இனிமேல் EMIS open செய்து login கொடுத்து எதனை open செய்து update செய்ய வேண்டுமோ அதனை Long press click செய்து அதனை update செய்யலாம். academic record, weekly timetable assign, school profile,indent, distribution அனைத்தும் openஆகும் நமது மொபைலில்..
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹அரசு பள்ளிகளில் பழைய, சேதமான கட்டிடங்களை இடித்து அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
👉தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான இடங்களில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை அகற்றவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, பல பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க, இரண்டு மாதங்களுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விடுபட்ட பள்ளிகளின் கட்டடங்களை, இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில், பொதுப்பணித்துறை உதவியுடன் அகற்றும் படி, முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:
Post a Comment
Please Comment