*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மார்கழி 8 ♝ & 24•12•2019*
🔥
🛡இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் -03.01.2020, பள்ளி கல்வி இயக்குநர்
🔥
🛡தேர்தல் பணி வேண்டாம்.... எங்களை விட்டுடுங்க - தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
🔥
🛡அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளித் திறக்கும் நாளன்று தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகளை விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கியுள்ளார்.
🔥
🛡தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான இடங்களில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டடங்களை அகற்றவும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் பி.எட்., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெறுவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 0.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் பள்ளி கல்வி போல் கல்வியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*
No comments:
Post a Comment
Please Comment