அரையாண்டு விடுமுறை ஒருநாள் நீட்டிப்பு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரையாண்டு விடுமுறை ஒருநாள் நீட்டிப்பு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறப்பு

அரையாண்டு விடுமுறை ஒருநாள் நீட்டிப்பு 

ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறப்பு 

அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளி களுக்கும் நேற்று (23-ம் தேதி) அரையாண்டுத் தேர்வு முடிந்தது. ‘தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடு முறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளி கள் மீண்டும் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

 இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள தால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், “2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதியோடு முடிவடைந் துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 3-ம் தேதி திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.

Half-year Holiday One Day Extension

Schools to open on Jan. 3

Half-year holidays have been extended for another day, and it is announced that schools will open on January 3. All types of schools under the Government of Tamil Nadu yesterday (23rd) ended the half year. Once the exams are complete, release from December 24 (today) to January 1. The school department has already announced that the school will reopen on January 2. 

At the same time, it has been announced that the number of local election voting will be held on January 2, and the half-year holidays will be extended by one day and schools will be opened on January 3. In a circular sent to all the Chief Education Officers and District Education Officers by the Director of the School Education Department, Kannappan said, “The 2019-20 academic year is to end on the 23rd. After the end of the half-year holiday, all government and government-aided schools will open on January 3.

No comments:

Post a Comment

Please Comment