பள்ளிகள் திறக்கும் நாளில் வழங்க
3-ம் பருவ பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது முப்பருவக் கல்வி முறை அமலில் உள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 69 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஜூன், அக்டோபர், ஜனவரி என 3 பருவங்களாக பிரிக்கப் பட்டு புத்தகங்கள் விநியோகிக் கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் 2-ம் பருவம் முடிந்து அரை யாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைந்தன.
இதையடுத்து தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர் களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கேற்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவல கங்களில் இருந்து பள்ளி களுக்கு 3-ம் பருவத்துக்குரிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் பணிகளுக்கு இடை யூறு ஏற்படாதவாறு பொறுப் பாளர்களை நியமித்து புத்தகங்களை பாடவாரியாக வாங்கி வைத்துக் கொள்ள உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து பள்ளி தலைமை யாசிரியர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளதாக துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.
Distribution of 3rd Term text books to be delivered on the opening day of schools
The school has begun sending 3-year textbooks to schools to deliver to students on the opening day of the year-end holiday.
Trimester education system in Tamilnadu school is currently in force. There are about 69 lakh students and students studying in government and government aided schools in the state.
They are distributed in three seasons - June, October and January. Season 2 of the current academic year ended on December 23, half a year. The schools are due to open again on January 3 after a series of holidays.
The Government of Tamil Nadu has ordered the distribution of textbooks and notes to the students on the opening day. Accordingly, books and notes for the 3rd term have been sent to the schools from the District Primary Education Office. Department officials said that all school Head Master have been instructed to appoint responsible teachers to buy books and make books available to them so that there is no interruption in the election duties.

No comments:
Post a Comment
Please Comment