ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அதிருப்தியில் புலம்பும் ஆசிரியர்கள் ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அதிருப்தியில் புலம்பும் ஆசிரியர்கள் !

ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அதிருப்தியில் புலம்பும் ஆசிரியர்கள் ! 



முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அனைத்து வாக்கு பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். 

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கலந்து கொள்வர்.வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ள ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அதிகாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிகளில் இருக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிவடைய சில சமயம் நள்ளிரவு ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மீண்டும் மறு நாள் பள்ளிக்குச் செல்வது மிகவும் சிரமமானது என்பதால் இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பள்ளிகளை ஒரு நாள் கழித்துத் திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Schools open on January 3rd ..


The first local government election was held yesterday. The second phase of elections will be held on the 30th. After the election, all ballot boxes will be sealed and taken to the ballot counting centers.Counting for these elections is scheduled for January 2. 

Teachers will be participating in the vote count.Teachers assigned to vote will be on the ballot at 5 am and it is sometimes midnight.Meanwhile, the school education department has announced that the schools will open on January 3 after the New Year's celebration.

The announcement has caused great displeasure among teachers, as it is very difficult to return to school the next day after the midnight vote count. Thus, the teachers have demanded that the schools be reopened a day later.

No comments:

Post a Comment

Please Comment