தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 போ மீது ஒழுங்கு நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 போ மீது ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 போ மீது ஒழுங்கு நடவடிக்கை 



தருமபுரி: தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா், தேர்தல் அலுவலருமான சு. மலா்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கான தோதல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

 இத் தேர்தல் பணிக்காக 13,595 ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்றது. பயிற்சியில் 694 ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 694 ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தோதல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றாா்.



Disciplinary action to be taken against 694 teachers who have not participated in the training workshop 

The district administration and drilling officer, Su. MALAWASHI Wednesday's press release: In the Darumapuri district, the elections for District Panchayath Committee members, Union Committee members, Panchayat members and Panchayath Talav are in two stages. 13,595 teachers and government officials have been appointed for this task. 

The first ever training camp for them was held on December 15th. It is learned that 694 teachers and government officials did not participate in the training. The state drilling commission has ordered 694 teachers and government officials who do not participate in drilling classes to take action under the drilling rules. On this basis, action has to be taken against them.

No comments:

Post a Comment

Please Comment