மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் விரைவில்
‘காவலன்’ செயலியில் புதிய மாற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தகவல்
காவலன்’ செயலியை மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வகை யில் விரைவில் புதிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக ஏடிஜிபி ரவி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி எம்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
உலகில் நடைபெறும் பெரும் பாலான குற்றங்கள் குழந்தை களுக்கும், பெண்களுக்கும் எதிராகத்தான் நடைபெறுகின்றன. மற்ற குற்றங்கள் குறைவாகவே இருக்கின்றன. அவற்றைத் தடுக் கும் நோக்கிலேயே தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது. தெலங்கானாவில் நடந்த சம்பவம் பலரையும் உலுக்கியது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன.
அதுவும் இல்லாத நிலை உருவாக்கப்படும். சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப் போது கூட சென்னையைச் சேர்ந்த 30 பேர் பட்டியலை அனுப்பி நட வடிக்கை எடுக்கக் கூறிவிட்டுத்தான் வந்தேன்.
இரண்டு மாணவிகள் என்னைச் சந்தித்து ஆபாச படம் பார்த்ததாக வும், எங்களை மன்னித்து விடுங்கள் எனவும் கூறினர். இனிமேல் செய் யாதீர்கள் என சொல்லி அறிவுரை கூறி அனுப்பினேன்.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால் அதற்கு நாம் இரையாகி விடுகின்றோம். ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தினால் முன் னேறலாம்.
இணையத்தை ஒழுக்க மாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
7.3 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் ‘காவலன்’ செயலியை 10 லட்சம் பேர்தான் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் 4 லட்சம் பேர்தான் தங்க ளது முழு தகவல்களை கொடுத்து பதிவு செய்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, ‘யூசர் பிரண்ட்லியாக’ செயலி இல்லை என்று குறிப்பிட்டனர்.
எனவே, ‘காவலன்’ செயலியில் ஒரு வாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். போன் நம்பர் மட்டும் பதிவு செய்யப்பட்டு செயல்படும் வகையில் மாற்றப்படும். செயலி யில் மட்டுமல்ல, இனிமேல் காவல் துறையின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் இருக்கும்.
உங்களுக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான் என நினைத்துக் கொள்ளுங்கள். பெண் கள் எப்படி உடையணிகிறார்கள் என்பது பார்ப்பவர்களிடம் இருக் கிறது.
தவறாகக் கருதினால் பார்வை கோணல். மழையால் குடை நனைந்தது. நான் நனைய வில்லை என்பார்கள்.
காவல்துறை உங்களுக்கு குடையாக இருக்கும். உங்களை நனையவிட மாட்டோம். ஆண் களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் உடல்வலு இருக்கிறது. ரவுத்திரம் பழகுங்கள். யாராவது சீண்டினால் உதையுங்கள். குத்துங்கள். தூக்கி யெறிங்கள். இவ்வாறு ஏடிஜிபி எம்.ரவி கூறினார்.
New Changes in
KAVALAN MOBILE APP to Be Easier to Use
ADGP Ravi has announced that the changes will be made to the simplified version of the police telecommunication process. Addressing a function at a private women's college in Kodambakkam, Chennai, ADGP M Ravi spoke at the crime prevention unit against women and children. He said: “The most serious crimes in the world are against children and women. Other crimes are few and far between.
The Tamil Nadu Police Department is working to curb them. The Telangana incident rocked many people. Crimes against children and women in India are low in Tamil Nadu. The absence of that will create. Action is being taken against those who share pornographic images of children. At this time, I sent a list of 30 people from Chennai and asked to take the form. Two students met me and said that they had seen the pornographic film and apologized. I advised you not to do it anymore. We fall prey to the misuse of technology.
You can pre-emptively use it. We are trying to raise awareness on how to use the internet ethically. In Tamilnadu with a population of 7.3 crore, just over 10 lakhs have downloaded the mobile phone processor. More than 4 lakh people have registered for the full details of their stay. When asked about the reason, they noted that there was no user-friendly phone processor. So, the changes will be made in one week.
Only the phone number can be registered and changed to function. There will be changes not only in the processor but also in the functions of the police department. You have a brother. Assume he is a police officer. It is up to the viewers to see how women dress.
Angle of view if misplaced. The umbrella was drenched by the rain. They didn't say I wasn't cool. The police will be your umbrella. We won't let you down. Not just for males. You have the physical. Practice Routine. Get kicked by someone. Punches. Throw up Thus said ADGP M. Ravi.

No comments:
Post a Comment
Please Comment