ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காற்று மாசு: தப்பிக்க வழி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காற்று மாசு: தப்பிக்க வழி!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காற்று மாசு: தப்பிக்க வழி!



என் வயது 32. இரு சக்கர வாகனத்தில் சென்னையில் பல இடங்களுக்கும் சென்று பிஸ்கட் டெலிவரி, பிரட் டெலிவரி செய்யும் வியாபாரம் செய்து வருகிறேன் . சிக்னலில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டூவீலர், கார் போன்ற வாகனங்களின் பின்னால் நிற்க வேண்டிய நிலை வரும் போதெல்லாம், பெட்ரோல், டீசல் புகையை முகர்வதால், கடும் தும்மல், மூச்சிரைப்பு, தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், இருமல், மயக்கம் என்றெல்லாம் ஏற்பட்டு அவதியுறுகிறேன். இதை எப்படி குணப்படுத்துவது? -பி.கே. ராஜேந்திரன், ,அரும்பாக்கம், சென்னை. உடலின் சகிப்புத்தன்மை குறைந்து போவதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். போதுமான அளவிற்கு பிராணவாயுவை உள்ளிழுக்க முடியாத இது போன்ற சந்தர்ப்பங்களில், மூச்சிரைப்பு, தும்மலும், இருமலும் ஏற்படுவது இயற்கையே. நுரையீரலை வலுப்படுத்திக் கொள்வதும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெறுவதிலும் நீங்கள் முனைப்பு காட்ட வேண்டிய அவசியமிருக்கிறது. 


அதற்குள் வில்வத்தின் இலை, துளசி இவற்றில் ஒன்றையோ இரண்டையுமோ தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாற்றை சம அளவாக எடுத்து, அந்த சாற்றிற்குச் சமமாக நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றி கசண்டு மணல் பாகத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதில் ஒன்றிரண்டு துளிகளை மூக்கினுள் விட்டு உறிஞ்சித் தும்மி- மூக்கைச் சிந்துவதால் மூக்கடைப்பு, ஜலதோஷம் முதலியவை நீங்கும். இதைச் செய்வதற்கு நேரமில்லை, தயாரித்து விற்கப்படும் மருந்து ஏதேனும் உள்ளதா என்று நீங்கள் கேட்டால், துளஸ்யாதி தைலத்தைப் பயன்படுத்தலாம். ள் பயணம் செய்யாத நேரத்தில், சுத்தமான காற்றுள்ள பகுதி ஏதேனும் அதிர்ஷ்டவசமாக உங்களுக்குத் தென்பட்டால், அப்பகுதியில் சிறிது நேரம் அமர்ந்து மூச்சுக் காற்றை நிதானமாக உள்ளிழுத்து வெளியே விடும் பயிற்சியைச் செய்யலாம். இதனால், மூளையும், நுரையீரலும் சுறுசுறுப்படைந்து உற்சாகமாக வேலை செய்யும். 


முகத்திலுள்ள மூக்கு வாய்ப் பகுதிகளை மட்டும் மறைக்கக் கூடிய அளவில் தற்சமயம் வந்துள்ள பல முகத்திரைகளில் சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து, பயணத்தின்போது அணிந்து செல்லலாம். தலைக் கவசத்தினுள்ளே அணிந்து கொள்ளக் கூடிய நன்கு விரிந்து கொடுக்கும் தன்மையுடைய, கண்களை மட்டும் மறைக்காமல், பிற முகப்பகுதிகளை மறைக்கும் வகையில் வந்துள்ள முகத்திரைகளை நீங்கள் அணிந்து செல்வது நல்ல பாதுகாப்பைத் தரும். காற்றிலுள்ள தூசு மற்றும் நச்சுக் காற்றை வடிகட்டி, தூய காற்றை சுவாசிக்கும் வகையில் முகத்தை மறைக்கும் திரைக் கவசங்கள் சென்னை போன்ற மாநகரங்களுக்கு அவசியம் தேவைதான். வெறும் வெந்நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை இரவில் படுக்கும் முன் செய்து கொண்டு வந்தால், வாய்ப்பகுதி சுத்தமடைவதுடன், உட்புறம் சேர்ந்துள்ள தூசுக் காற்றின் அழுக்கையும் அகற்றிவிடும். மூக்கினுள் மருந்தை விட்டு தூசியை வெளியேற்றக் கூடிய வகையில் வந்துள்ள அனுதைலம் எனும் மருந்தை இரண்டு - நான்கு சொட்டுகள் இரவு படுக்கும் முன் விட்டுக் கொள்வதும் நல்லதே. 


மூச்சுக்குழாய்க்கும் நுரையீரலுக்கும் நேரடியாக வலு சேர்க்கக் கூடிய எண்ணற்ற மருந்துகள் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு தசமூலரசாயனம், அகஸ்த்திய ரசாயனம், வசிஷ்ட ரசாயனம் போன்ற லேகிய மருந்துகளை உடல் நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதால், வலுவுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலுக்கு ஏற்படுத்தித் தருகின்றன. யோகப் பயிற்சியில் கற்றுத் தரப்படும் சில ஆசனங்கள் பிராணாயாமம் போன்றவை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை. சென்னையில் அவற்றைக் கற்றுத் தரக் கூடிய நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். 


காற்றிலுள்ள தூசு, மாசு மற்றும் நச்சுப் புகை ஆகியவை நுரையீரலுடன் சேர்த்து கண், காது, முகத்திலுள்ள தோல் ஆகிய பகுதிகளையும் பாதிக்கக் கூடிய ஆபத்தும் இருப்பதால் அப்புலன்களையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய கடமையும் நமக்கிருப்பதால், கண்ணில் ஆயுர்வேத மருந்தாகிய இளநீர் குழம்பு எனும் சொட்டு மருந்தை விட்டுக் கொள்வதும், காதினுள் க்ஷர தைலம், வசாலசூனாதி தைலம் ஆகியவற்றில் ஒன்றை வெது வெதுப்பாக விட்டுக் கொள்வதும், முகத்தினுடைய தோல் வசீகரம் கெடாதிருப்பதற்காக ஏலாதி கேர தைலத்தைப் பயன்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகிப் போனதால், நீங்கள் தொழில் சார்ந்த இந்த உபாதைகளை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.



Life-Saving Ayurveda: Air Pollution: The Way to Escape!


I am 32 years old. I am a bicycle delivery and bread delivery business. Whenever I have to stand behind auto, share auto, two-wheeler, car, etc., I suffer from petrol and diesel smoke, heavy sneezing, wheezing, headache, headaches, colds, coughs, drowsiness. How to cure this? Pike Rajendran,, Arumbakkam, Chennai. The root cause of this is the decrease in body endurance. In such cases, wheezing, sneezing, and coughing can occur naturally, which is not enough to inhale oxygen. You need to focus on strengthening the lungs and gaining immunity. 


One or both of the leaves of the bow and basil should be taken in equal quantity with the dissolved juice, and the equal amount of fine oil should be diluted and drained and bathed in a gauze sandbag. Sneezing and sneezing one of the two holes in the nose - thinking of the nose will relieve nasal congestion and colds. There is no time to do this, and if you ask if there is any drug that is manufactured and sold, you can use tulsi balm. If you are lucky enough to find a clean air area while traveling, you can sit in the area for a while and practice breathing in and out. Thus, the brain and the lungs are active and actively working. You can choose some of the many masks that come in now and then wear them on the go, covering only the mouth area of ​​the face. 


Wearing helmets that cover the other face areas, not only the eyes, but also the wide spreads that can be worn under the helmet, provide better protection. In cities like Chennai, there is a need for screen veils that filter the dust and toxic air in the air and cover the face to breathe pure air. If you are just using the mouthwash of the hot water before going to bed at night, the area will be cleansed and the dirt of the inside air will be cleared. It is also advisable to leave two to four drops of Anandilam in the nose to clear the dust. In Ayurveda, there are a number of medications that directly strengthen the lungs and lungs. 


For example, the use of laxative medications such as Dasamularaya, Agastya Chem, Vasishtha Chemistry, according to the body condition, can also strongly exert immunity to the lungs and lungs. Some of the asanas taught in yoga are like pranayama. There are good asans who can teach them in Chennai. From the air and dust, pollution and toxic smoke in the lungs, including the eye, ear, facial skin, parts of which affect risk appulankalaiyum to save the duty Since we have, in the Ayurvedic maruntakiya coconut curry the drops away, to katinul ksara balm, vacalacunati balm in one Etu vetup take up the face of the leather charm ketatiruppatark use oil as kera elati kattayamakip lack of time, you should engage in efforts to eliminate occupational this affliction.

No comments:

Post a Comment

Please Comment