நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?

நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்? 

நீர் நிரப்பிய வாளியில் கையை விட்டு சுழற்றும்போது, வாளியில் உள்ள நீர் சுழல்கிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்று வேகத்தின் வர்க்கத்திற்கு நேர்விகித தொடர்பு கொண்டிருக்கும். 


நீரை வேகமாக சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய விலக்கு விசையால், வாளியின் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்பு நோக்கி நகரும். இதனால் நீர் மட்டம் மையத்தில் தாழ்ந்தும் விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நிரின் மையப்பகுதியில் குழி ஏற்படுவதால் அது சுழி ஆகிறது.

No comments:

Post a Comment

Please Comment