உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இளைஞர் நாடாளுமன்ற போட்டி
ஜன.31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
தேசிய அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) செய லாளர் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
மத்திய அரசு சார்பில் 1996-ம் ஆண்டு முதல் ‘இளைஞர் நாடாளு மன்றம்’ போட்டிகள் நடத்தப்படு கின்றன. மாணவர்களிடம் நாடாளு மன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை வளர்க்கவும், அதுதொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதன்மூலம் மாணவர்கள் இடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளும் மேம்படும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றம் போட்டிக்கு விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் http://nyps.mpa.gov.in/ இணையதளம் வழியாக ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, வீடியோ, புகைப்படங்கள், கட்டுரை கள் இடம்பெற்றுள்ளன.
போட்டி யில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அனைத்து பல்கலைக்கழகங் கள், கல்லூரிகளின் நிர்வாகங் களும் இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Youth parliamentary competition for higher education students
Instructions to apply by Jan. 31
UGC says students studying in higher education can apply for the national youth parliamentary competition by January 31. A circular sent to the University Grants Commission (UGC) Secretary Lawyer Rajnish Jain, to all the universities:
The Youth Affairs Forum has been conducting telecommunication competitions since 1996. This competition is held to help students develop an understanding of the democracy of the country and to find out the relevant information. It will also enhance the virtues of discipline and tolerance among students.
Accordingly, those who wish to contest the National Youth Parliamentary Competition for the current year can apply through the central government's http://nyps.mpa.gov.in/ website by January 31. The website features a competition guide, video, photos and articles. All participants will be certified. All universities and colleges should advise students to apply for youth parliamentary competition. It is stated thus.

No comments:
Post a Comment
Please Comment