தனிநபர்களுக்கான வருமானவரி பட்ஜெட்டில் குறைக்கப்படவாய்ப்பு ? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனிநபர்களுக்கான வருமானவரி பட்ஜெட்டில் குறைக்கப்படவாய்ப்பு ?

தனிநபர்களுக்கான வருமானவரி பட்ஜெட்டில் குறைக்கப்படவாய்ப்பு ?



தனிநபர்களுக்கான வருமான வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிநபர்களுக்கான வருமான வரியையும், நீண்டகால மூலதன ஆதாயத்திற்கான வரியையும் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு எண்ணியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கடியில் உள்ள நிதிச் சேவைகள் நிறுவனங்களுக்கு உதவி அளிப்பது, தனியார் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் இறக்குமதி வரிகளை உயர்த்துவது மற்றும் உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், தனிநபர் வருமான வரியைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அத்துடன் தேவையை அதிகரிக்கச் செய்யவும், பொருளாதார வளர்ச்சியை மீட்சி அடையச் செய்யவும் தனிநபர் வருமான வரியைக் குறைக்கும் படி பல்வேறு தரப்பினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கி, ஐஎம்எஃப், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகளும், தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. முன்னதாக பொருளாதார மந்த நிலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பெருநிறுவனங்களுக்கான வரி விகிதமானது 30 சதவீத அளவிலிருந்து புதிய தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதமாகவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 22 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 

இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். இது ஒருபுறமிருக்க, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், பங்கு முதலீடுகள் மீதான நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கான வரியைக் குறைக்கவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வரியை முழுமையாக நீக்கும்படியும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் அலுவலக அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்கு சில பொருள்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும், அதேவேளையில் பரஸ்பர நிதிச் சந்தை மற்றும் பங்குகளில் சில்லரை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நீண்டகால மூலதன ஆதாய வரிகளை நீக்கும்படி தொழிற்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். வருமான வரியைக் குறைப்பதன் வாயிலாக தனிநபர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பலன் நுகர்வை அதிகரிக்கவும், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கவும் உதவும் என ஃபிக்கி வர்த்தக அமைப்பு அரசுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது.



Income tax budget for individuals is likely to be reduced. 

According to reports, the federal government is considering reducing the income tax for individuals and long-term capital gains. According to reports, the central government intends to take this step to promote economic growth. Reports suggest that there are various issues involved, including helping financial services companies in crisis, boosting private investment and increasing import taxes and boosting domestic production. There seems to be an ongoing consultation on reducing the personal income tax to increase liquidity for people. 

Various parties are urging the central government to reduce the personal income tax to increase demand and restore economic growth. Economic growth slowed to 4.5 percent in the second quarter of the current fiscal. It was 7 percent in the second quarter of last year. Also, private sector rating agencies, such as the Reserve Bank, the IMF and the Asian Development Bank, have indicated that economic growth will remain at around 5 percent for the current fiscal year. 

In the past, with the impact of the recession, the tax rate for corporations has been reduced from 30 percent to 15 percent for new producers and 22 percent for existing companies. Union Finance Minister Nirmala Sitharaman will submit the budget for the fiscal year on February 1. He is also holding pre-budget consultations in this position. On the other hand, it is reported that it is also planning to reduce the long-term capital gains tax on equity investments to attract investors. It is also reported that recommendations have been made for the abolition of this line. 

Industry leaders have been urging the elimination of long-term capital gains taxes to promote retail investment in the mutual fund market and stocks, while lowering import duty on certain goods to promote domestic production. The Fiki Trade Organization said in a petition to the government that the additional benefit to individuals by reducing the income tax will help increase consumption and increase demand for goods and services.

No comments:

Post a Comment

Please Comment