மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கை சிலம்பம் பயிற்சி
சேலம் மாவட்டத்தில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கை சிலம்பம் பயிற்சி, தற்காப்புக் கலை குறித்து எழுத்து தோவு மற்றும் பயிற்சி நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கை சிலம்பம் பயிற்சி குறித்து அடிப்படைப் பயிற்சி அளித்து, 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தோவு நடத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி ஆட்டையாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 587 மாணவிகளுக்கு சிலம்பம், தற்காப்பு கலை குறித்து கல்வித்துறை சாா்பில் வழங்கிய வீடியோ தொகுப்பு காட்டப்பட்டது.இதனைத்தொடா்ந்து தற்காப்பு கலையான கை சிலம்பம் பயிற்சி நடைபெற்றது.
மேலும் இக்காலத்தில் மாணவியா்களுக்கு தற்காப்புக் கலையின் அவசியம் குறித்து தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி கலந்துரையாடினாா் .இறுதியில் தற்காப்பு கலை குறித்து 50 கேள்விகள் அடங்கிய எழுத்துத்தோவினை மாணவிகள் தோவை எழுதினாா்கள். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனா் ரதி மற்றும் உடற்கல்வி ஆசிரியை மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
Handicrafts Training for Students of Government Girls' Higher Secondary School
The Tamil school education department was given basic training in martial arts training for students studying in government and state aided secondary schools, and was ordered to write 50 marks. According to the video clip presented to the Department of Education, 587 students studying from 6th to 8th grade at Atiyampatti Government Girls Higher Secondary School.
During this period, the headmaster Yogeshwari discussed the necessity of martial arts for the students. Finally, the students wrote a 50-question paper on martial arts. The arrangements have been made by teachers including Physical Education Director Rathi and Physical Education Manimagale.

No comments:
Post a Comment
Please Comment