சி.பி.எஸ்.இ. வகுப்புக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு.!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சி.பி.எஸ்.இ. வகுப்புக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு.!!

சி.பி.எஸ்.இ. வகுப்புக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு.!! 



சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 30-ந்தேதி வரை நடக்கவுள்ளது . இதில், 137 பாடப்பிரிவுகளின் பொதுத்தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110 பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரையிலும் , 8வகையான பாடப்பிரிவிற்கு காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடக்க இருக்கிறது . 

 இதில் காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும், அவ்விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் போன்ற விவரங்களை எழுதுவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்களும்,10.15 மணிக்கு வினாத்தாளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . வினாத்தாளை வாசித்து பார்ப்பதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது , பின் 10.30 மணிக்கு தேர்வுகள் ஆரம்பிக்கும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது . கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது. 



CBSE Release of General Elections List for the class. !! 


CBSE The public has released the general election schedule for 12th standard students in schools. CBSEs nationwide The general election for students in grades 12 to 12 will begin on February 15 and continue till March 30. Of these, the CBSE lists the general elective list of 137 subjects. The exams for the 110 syllabus will be held from 10.30 am to 1.30 pm, for 19 types of courses, from 10.30 am to 12.30 pm and for the 8 types of subjects. 

The students will be given answer sheets at 10 am, it will be announced on the first page of the website, to write the details such as the name and registration number. The Examination Room has announced that 15 minutes will be allotted to read the questionnaire and the exams will begin at 10.30am. For more information, please visit www.cbse.nic.in.

No comments:

Post a Comment

Please Comment