பல் சொத்தைக்கு எளிய தீர்வு!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் பாதிக்கும் ஒரு பிரச்னை பல் சொத்தை. இதனை எளிய முறையில் குணப்படுத்த புதிய சிகிச்சையைக் கண்டறிந்திருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
பல் சொத்தை ஏற்பட்டுள்ள பகுதியை செராமிக் பசை மற்றும் சில உலோக பசையால் நிரப்பிவிடுவது உலகளாவிய பொதுவான சிகிச்சையாக உள்ளது. ஆனாலும் இது தற்காலிக தீர்வையே தருகிறது. தற்போது இதற்கு மாற்று வழியாக, பல் எனாமலை மறுபடி வளரச் செய்துவிடும் புதிய ஜெல்லை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சுமார் 49 கோடி குழந்தைகள் பால் பற்கள் வளர்ச்சியின்போதே பல் சிதைவை எதிர்கொள்கின்றனர் என்கிறது 2016-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம். மக்களில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் சில முறையாவது பல் சொத்தை பாதிப்பை கடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்காலிகமான எனாமல் பசை இவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை.
தற்போது சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஜெல் பசையானது 48 மணி நேரத்தில் பற்சிதைவு பாதிப்பை தானாக சரிசெய்து கொண்டு அதன் மேற்புரத்தில் ஒரு உறைபோல படிந்து கொள்கிறது.
இது வழக்கமான எனாமலைவிட பல மடங்கு மென்மையான அடுக்காக இருந்தாலும் மிக உறுதியானது. பயன்பாட்டுரீதியில் மிகவும் எளிதானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆய்வகத்தில் எலி மீது பரிசோதிக்கப்பட்டு வெற்றி கிடைத்துள்ள இந்த எனாமல் ஜெல் முறை, அடுத்த கட்டமாக மனிதர்களிடம் பரிசோதனை முறையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுகளில் வெற்றி கிடைத்தால், பல் சொத்தை பிரச்னை உடையவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Simple solution for dental property!
Toothlessness is a problem that affects children from adults to prejudices. Chinese scientists have found a new treatment to cure it. The most common treatment worldwide is filling the tooth area with ceramic glue and some metal glue. However, this is only a temporary solution. Scientists have now developed a new gel that will regenerate dental caries.
According to a 2016 survey, about 49 million children face tooth decay during the course of their teeth. Most people have at some point in their lives to overcome the impact of dental property. Temporary enamel glue does not give them a permanent solution. The gel paste, currently discovered by Chinese scientists, automatically corrects the tooth decay in 48 hours, and forms an envelope on its surface.
It is many times softer than the usual, but more stable. Researchers say it's very easy to use. This enamel gel method, which has been tested and successful on mice, is to be tested in humans in the next phase. If this study is successful, there may be a better solution for those with dental problems.

No comments:
Post a Comment
Please Comment