தமிழகம், புதுவையில் மழை வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 1 செமீ மழை பதிவாகியுள் ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Rain chance in Tamil Naduand Puducherry
Due to atmospheric overflow in the Bay of Bengal, rainfall is likely to occur in Tamil Nadu and Puducherry for the next two days.
Chennai Meteorological Department officials said: Atmospheric overlap is occurring near Sri Lanka in the South West Bengal Sea.
Due to this, light rains are expected in some parts of South Tamil Nadu and in other parts of North Tamil Nadu for the next two days. The sky is generally cloudy in Chennai and suburbs.
No chance of rain. According to the measure of rainfall recorded in the 24 hours that ended at 8.30 am on Sunday, Thoothukudi district received 1 cm of rain in Kayalpattinam. Thus said the authorities.

No comments:
Post a Comment
Please Comment