மருத்துவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த அட்டவணை பல்கலை. இணையதளத்தில் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு அபராத தொகை இல்லாமல் விண்ணப்பம் அளிக்க ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்து மேலும் கூடுதல் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Extension of time to apply for medical examination
The deadline for students to submit applications for medical university examination is extended. Tamilnadu Dr MGR Medical University yesterday announced that the Medical University Examination will be held in February 2020.
Students preparing their exams will submit their applications to the university. The website was released on the 3rd. As the Christmas and local election holidays have been granted, the deadline for applying for the exam is extended until January 7. More details about the exam can be found on the University website www.tnmgrmu.ac.in It says so....

No comments:
Post a Comment
Please Comment