நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் - மாண்புமிகு கல்வி அமைச்சர்
அவர்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
மருத்துவ படிப்புக்கான நீட் தோவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் தோச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதையடுத்து ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத்தோவுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்.24-ஆம் தொடங்கின. இதன் மூலம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்தநிலையில் இந்த மாணவா்களுக்கு அமெரிக்க நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: 'மாணவா்களுக்கு நீட் தோவிற்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனத்தினா் வருகை தரவுள்ளனா். சிறந்த முறையில் நீட் தோவிற்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படவுள்ளது' என அதில் கூறியுள்ளாா்.
Ministry of Education has signed an agreement with the US Institute for the Free Need Training for Public School Students. Educational Minister Mr Sengottaiyan said.
The Government of India has launched a series of free tuition classes in the year 2017 for the purpose of helping the government and government aided school students in need to get medical education. Subsequently, a total of 412 unionized government schools plus 2 students are being trained for NEET and JEE admissions at a central rate per union.
Training sessions for the current year started on 24th September. Through this, more than 13,000 student-athletes are trained on Saturdays, Sundays and holidays. At the same time, these students will be trained at the US Institute, Sengottaiyan said.
As a follow up to this, Ava posted on his shooter on Saturday: “I have data from US companies visiting within a week to provide free training for students. The agreement to train Neet Tho is best done within a week, ”it said.

No comments:
Post a Comment
Please Comment