யாருக்கெல்லாம் வாக்குசாவடிக்குள் அனுமதி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யாருக்கெல்லாம் வாக்குசாவடிக்குள் அனுமதி?

யாருக்கெல்லாம் வாக்குசாவடிக்குள் அனுமதி? 

9 விதமான நபர்களுக்கு மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதி 

வாக்குச்சாவடிக்குள் 9 விதமான நபர் களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலு வலர் உட்பட 7 அலுவலர்கள் நியமிக் கப்படுகின்றனர். 

மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி அலுவலர் கள், தேவை ஏற்பட்டால் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியுடன் 

போலீஸார், 
மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 
தேர்தல் பார்வையாளர்கள், 
வேட்பாளர்கள், 
தேர்தல் முகவர்கள், 
வாக்காளர்கள், 
வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தைகள், 
மாற்றுத் திறனாளியின் உதவியாளர் என 9 விதமான நபர்களை மட்டுமே அனுமதிக்கலாம். 

இதுதவிர மாநில தேர்தல் ஆணை யத்தால் அங்கீகரிக்கப்பட்டோரையும் அனுமதிக்கலாம். ஆண், பெண் வாக்காளர் களுக்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்த வேண்டும். ஆண், பெண்ணை மாறி, மாறி வாக்களிக்க அனுமதிக்க வேண் டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment