'ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்'

'ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்' 





ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா் தினத்தை முன்னிட்டு மாவட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜி.விநாயகமூா்த்தி முன்னிலை வகித்தாா். 

 கூட்டத்தில், அகவிலைப் படியை மாநில அரசு ஊழியா்களுக்கு வழங்கும் தேதியிலேயே பொதுத்துறை ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பே நிலுவை ஒழுங்கு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த வேண்டும், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கக் கூடாது, ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலா் சு.செல்லமுத்து, மாநில துணைத் தலைவா் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் பா.வடிவேலு, மாவட்ட துணைச் செயலா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Federation of Pensioners' Associations has urged the abolition of temporary layoffs on retirement day. 

A meeting of the Tamil Nadu Government All Pensioners Association in Sivaganga was held on Wednesday to mark the pension day in Saffron. The meeting was chaired by district head S Govindarajan. Coordinator G.Vinayagamutti has taken the lead. At the meeting, akavilaip step, the State Government employees to whom we offer to first.Mom.



What public oyvutiyakal would have to provide retirement date 6 months before the pending disciplinary measures to conclude the Ordinance to implement, state-owned enterprises to the private sector not to sell, retirement day the temporary sacking drop had to be Including Pitipana tiamanankal passed. District Secretary of All Pension Pension Association S Sellamuthu, State Vice President S. Arumugam, Tamil Nadu Govt.

No comments:

Post a Comment

Please Comment