இன்றைய செய்திகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்




18.12.19(புதன்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
10ம் வகுப்பு தேர்வு, பிப். 15ம் தேதி முதல், மார்ச் 20 வரை நடைபெறுகிறது
12ம் வகுப்பு தேர்வு, பிப். 15 முதல் மார்ச் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
🍒🍒குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
🍒🍒சட்டம், ஒழுங்கை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
🍒🍒நெப்ட்(NEFT) முறைப்படி, 24 மணிநேரமும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
🍒🍒புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்க: இந்தியாவுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
🍒🍒எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நினைப்பவர்கள், இனி கட்டாயம் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🍒🍒DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு
🍒🍒ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம்வகுப்பு  பொதுத்தேர்வு  ஆயத்தபணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி  பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
🍒🍒அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது
🍒🍒நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி ' திறன் இந்தியா இயக்கம் ' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . அதன்படி , - அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் ( ஜனவரி ) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் , அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு ( யு . ஜி . சி . ) உத்தரவு
🍒🍒சேலத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2170 ஆசிரியர்களுக்கு மெமோ : சார்ந்த BDO அலுவத்தில் ஆஜராக சேலம் CEO உத்தரவு.
🍒🍒உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியீடு :
> Presiding Officer - Rs 2,050
> PO ( I, III to V ) - Rs 1550
> PO II  - Rs 600
> PO VI - Rs 600.
🍒🍒தேர்தல் தேதியில் நடைபெற இருந்த தொலைதூரக் கல்வித் தேர்வுகளை 10.1.19 & 11.1.19 என மாற்றியமைத்து அண்ணாமலை பல்கலைகழகம் அறிவிப்பு.
🍒🍒TNPSC 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியீடு - நாளிதழ் செய்தி.
🍒🍒மாதந்தோறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறையாமல் ஜி.எஸ்.டி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*
🍒🍒BSNL ஊழியர்கள் 78,569 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்
🍒🍒எல்லா பாகிஸ்தானியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம் என பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
🍒🍒சேலம் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
🍒🍒ஐ.பி.எல் ஏலம் திட்டமிட்டபடி டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
🍒🍒அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு
தற்போதைய பல்கலை கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும்"
புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்க தமிழக அரசு திட்டம்
சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியீடு
அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்
🍒🍒துணை வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது.
1,31 லட்சம் புதிய வாக்காளர்கள் துணை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளர்
- தேர்தல் ஆணையம்
🍒🍒பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு தூக்கு தண்டனை
தேசதுரோக வழக்கில் பாகிஸ்தான் பெஷாவர் நீதிமன்றம் உத்தரவு
2007ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு*_
தற்போது துபாயில் தங்கி இருக்கிறார் முஷாரப்
உடல்நிலை மோசமடைந்ததால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் முஷாரப்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டடுள்ளது.
இதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
வங்கி / அஞ்சலக கணக்கு புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 100 நாள் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், வாக்காளர் புகைப்பட சீட்டு மற்றும் பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதவாது ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துகள்

👉அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
👉கல்வித்துறையை மேம்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் மதுரையில் நடந்தது.ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்கள்:நவீன பாடத்திட்டங்களை கையாளுவதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். பயிற்சிகள் என்ற பெயரில் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது.
👉ஏனோதானோ என நடத்தாமல் அவசியம் கருதி பயன்அளிக்கும் வகையில் பயிற்சிகள் இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு இலவச சீருடைக்கு துணியாக வழங்கினால் உடல் அளவிற்கு ஏற்ப தைத்துக்கொள்ள முடியும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், பல பள்ளிகளில் இல்லை என்பதே உண்மை. இதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.ஆறு மாவட்டங்களின் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
👉மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஏற்பாடுகளை செய்தார்.கமிஷனருக்கு சத்துணவுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சிஜி தாமஸ் ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில்இருந்து மாணவர்களுக்கு சமைத்த சத்துணவைகொண்டுவர சொல்லி மதிய உணவாக சாப்பிட்டார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                                    என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment