கல்வி செய்திகள் 31/12/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி செய்திகள் 31/12/2019

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மார்கழி 15 ♝ &   31•12•2019*


🔥
🛡2019-2020 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இரண்டாம் பருவத்தேர்வு (அரையாண்டு தேர்வு)  விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 -ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் அறிவித்துள்ளார்

🔥
🛡பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற ஜனவரி 11 வரை கால அவகாசம் நீட்டிப்பு : தற்போது உயர்கல்வி பயில்வதற்கான சான்றுகளை தலைமையாசிரியரிடம்  சமர்ப்பித்து மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம்.

🔥
🛡தனித்தேர்வர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

🔥
🛡தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியல் வெளியீடு : 
மேற்பார்வையாளர் - 850 ; உதவியாளர்கள் - 650
பார்வையாளர்கள் - 500

🔥
🛡ஆதார் எண்- பான் கார்டு இணைப்பு கால அவகாசம் 2020 மார்ச் 31 வரை நீட்டிப்பு - வருமானவரித்துறை அறிவிப்பு..

🔥
🛡கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும்" - அனைத்து CBSE பள்ளிகளுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவுறுத்தல்.

🔥
🛡ME, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான "டான்செட்" தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் https://www.annauniv.edu இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🔥
🛡உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு முடிந்தும், பணி ஆணை வழங்காததால், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

🔥
🛡மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிகிறது.

🔥
🛡கல்வி பாதிக்காத வகையில் குழந்தைகள் குடும்பத்துக்கு பண ரீதியாக உதவும் வகையில் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தை நட்சத்திரமாக பணிபுரிவது குறித்த விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன .


*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment