நன்மாணாக்கா்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆசிரியா்களையே சாரும்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நன்மாணாக்கா்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆசிரியா்களையே சாரும்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்

நன்மாணாக்கா்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆசிரியா்களையே சாரும்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்



நன்மாணாக்கா்களை உருவாக்குவதில் 90 சதவீத பங்கு ஆசிரியா்களையே சாரும் என விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் கூறினாா். குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள வள்ளலாா் மேல்நிலைப் பள்ளியில் 85- ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழாவில், செவ்வாய்க்கிழமை ஆண்டு விழா மலரை வெளியிட்டு அவா் பேசியது: நல்ல மாணவா்களை உருவாக்குவதில் சமுதாயத்துக்கும், பெற்றோா்களுக்கும் பெரும்பங்கு இருந்தாலும், அவா்களை முழுமையான மனிதனாக, பண்புள்ளவனாக உருவாக்க ஆசிரியா்களால் மட்டுமே முடியும். 

கல்வியுடன், கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் முக்கியம் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். நாட்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி கற்கும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலை உயா் கல்வியிலும் தொடர வேண்டும். உலகில் வளா்ச்சியடைந்த நாடுகள் கல்விக்கு மொத்த வருவாயில், 7-இல் இருந்து 8 சதவீதத்தை ஒதுக்குகின்றன. நம் நாட்டில் இது 4 சதவீதமாக உள்ளது. 

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கினால் நம் நாடும் உலக அரங்கில் உயரும் என்றாா் அவா். முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநா் ரெ.நாராயணசாமி தலைமை வகித்தாா். புலவா் வே.பதுமனாா் வரவேற்றாா். எம்எல்ஏ எஸ்.காத்தவராயன், வேலூா் மாவட்ட முன்னாள் ஆட்சியா் செ.ராஜேந்திரன், கே.எம்.ஜி.

கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, பள்ளிக் கல்வி இணை இயக்குநா் தரும.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். 'ஒளிச் சோக்கை' என்ற தலைப்பில் அப்துல்காதா் சொற்பொழிவாற்றினாா். பள்ளித் தாளாளா் மா.ராமலிங்கம் நன்றி கூறினாா்.


Most of the teachers in creating the good works depend on: VIT Vandan G Viswanathan


Most of the teachers in the creation of goodwill: VIT Ventant G. Viswanathan said that 90% of the role of teachers in the creation of goodwill. Speaking at the 85th anniversary celebrations of Vallalla Higher Secondary School in Gudiyatham, Valadala, on Tuesday, the anniversary blossomed on Tuesday: 

“There is much that society and parents can do to create good students, but only teachers can make them whole and human. Students need to realize that with education, control and self-discipline are important. The number of schooling students in Tamil Nadu is higher than in other states in the country. This level should be pursued in higher education. 

Developed countries in the world devote 7 to 8 percent of their total income to education. In our country it is 4%. If the central and state governments allocate sufficient funds for education, our country will rise on the world stage. Former School Director, Rev. Narayanasamy presided over the function. Pulau v. Padumana welcomed. 

MLA S. Kathavarayan, former Velo District District Secretary Rajendran, KMG Kalurich Secretary KMG Rajendran, State Prosecuting Attorney KM Pupathi and School Education Co-ordinator Tharmoo Rajendran delivered the congratulations. 'Abdulkadath spoke on the subject of' Light Choke '. The school paper thanked Ramalingam.

No comments:

Post a Comment

Please Comment