*இன்று ஒரு தகவல்...*
ஒரு சாக்லெட்டும் மைக்ரோவேவ் ஓவனும்
மைக்ரோவேவ் ஓவன் உருவானதற்கு முதல் காரணம் சாக்லெட் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று யோசிக்க வேண்டாம். மைக்ரோவேவ் ஓவனைக் கண்டுபிடித்த பியர்ஸி ஸ்பென்சர்(Percy Spencer) ஒரு சாக்லெட் விரும்பி. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் கருவிகளுக்கருகில் பணிபுரிந்துகொண்டிருந்த பியர்ஸி, தன் சட்டைப்பையிலிருந்த Mr.Goodbar சாக்லெட் உருகியிருப்பதைப் பார்த்தார்.
அவ்விடத்திலிருந்த Magnetron ரேடார் கருவிகளிலிருந்து வெளிவந்த மைக்ரோவேவ் கதிர்களே தன் பாக்கெட்டிலிருந்த சாக்லேட் உருகக் காரணம் என்பதைக் கண்டறிந்த அந்தக் கணநேரத்தில் அண்ணாரின் சிந்தனையில் வந்ததே இந்த மைக்ரோவேவ் ஓவன் ஐடியா..
அதே(கம்பெனி) சாக்லெட்
Magnetron கருவியிலிருந்து வரும் மைக்ரோவேவ் கதிர்களைக் கொண்டு உணவுப்பொருட்களை வெகுவிரைவில் சூடாக்க முடியும் என்று சொல்லி பியர்ஸி உருவாக்கித் தந்ததே இன்று நாம் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் மைக்ரோவேவ் ஓவன்.
முதல் மைக்ரோவேவ் ஓவனுக்கு அவர் வைத்த பெயர் Radarange. பியர்ஸி ஸ்பென்சர், தான் கண்டுபிடித்த மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த(!!!!!) முதல் உணவு பாப்கார்ன். ஒற்றைச் சாக்லெட் நம் வீட்டில் ஒரு அ(நா)வசிய பொட்டியைக் கொண்டுவந்து வைக்கும் என யாராவது நினைத்திருப்போமா? ஹ்ம்ம்.

No comments:
Post a Comment
Please Comment