NPR பதிவேட்டில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

NPR பதிவேட்டில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்?

NPR பதிவேட்டில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்? 

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது இந்திய குடிமக்களின் பதிவேடு ஆகும். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) இது கிராமம்/பேரூராட்சி, துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய வாரியாக தயாரிக்கப்படுகிறது. 

இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருப்பவர்கள், அதற்கு மேல் தங்கியிருப்பவர்கள் அல்லது அடுத்த 6 மாதம், அதற்கு மேல் தங்க விரும்புகிறவர்கள், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் வருவர். இதன் நோக்கம் என்ன? இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரின் விரிவான அடையாளங்கள், விவரங்களை சேகரிப்பதுதான் என்பிஆர்-ன் நோக்கமாகும். 

இதில் ஆதார், செல்போன் எண், பான் எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, இந்திய பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை சேகரிக்கப்படும். 

குடும்பத் தலைவரின் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் விவரம், அவர்களுக்கும் குடும்பத் தலைவருக்கும் உள்ள உறவு, தந்தை பெயர், தாயார் பெயர், திருமணமானவராக இருந்தால் மனைவியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, மணமானவரா, பிறந்த இடம், பிறந்த நாடு, தற்போதுள்ள முகவரி, தற்போதைய முகவரியில் எத்தனை காலமாக வசித்து வருகிறார், நிரந்தர முகவரி, தொழில், கல்வித் தகுதி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். 

என்பிஆர்-ன் தற்போதைய நிலவரம்? 
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது என்பிஆர் தகவல்களும் கடந்த 2010-ம் ஆண்டு சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு வீட்டுக்கு வீடு சர்வே எடுத்ததன் மூலம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். அசாமில் இது நடைபெறாது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

What information will be collected in the NPR registry?

The National Population Register (NPR) is a record of Indian citizens. Indian Citizenship Act 1955 and Citizenship (Citizenship Registration and Issuing National Identity Card) It is prepared by village / panchayat, sub district, district, state, national wise. It is compulsory for all Indian citizens to register. 

Those who have been staying in India for the past 6 months, staying over or over the next 6 months and above, will fall under the National Population Register. What is its purpose? The purpose of the NPR is to gather detailed identities and information of everyone living in India. It will collect Aadhaar, cellphone number, PAN number, driver's license, voter ID card and Indian passport number. 

Name of family head, details of family members, relationship between them and family head, father name, mother name, spouse name, sex, date of birth, fianc ,e, place of birth, country of birth, current address, how long the current resident lives, permanent Collect details like address, occupation, educational qualification Will be. 

NPR's current status? 

The NPR data was also collected in 2010 during the 2011 Census. This information was updated by taking the 2015 Home to Home Survey. The work to digitally transform these details is underway. The Population Register will be held from April to September 2020. This will not happen in Assam. The Central Government has already issued a notification in this regard.

No comments:

Post a Comment

Please Comment