எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க ஓ.டி.பி. அவசியம் (8pm-8am).
வாடிக்கையாளர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கும்மேல், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓ.டி.பி. எனப்படும், ஒரு முறை பயன்படும் ரகசிய எண் முறை, ஜனவரி 1 முதல், எஸ்.பி.ஐ. வங்கியில் அமலுக்கு வருகிறது. வங்கிகளின், தானியங்கி பண பரிவர்த்தனை மையமான ஏ.டி.எம். இயந்திரங்களில், 'ஸ்கிம்மர்' என்ற கருவியைப் பொருத்தி, பணத்தைத் திருடும் சம்பவம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கும் விதமாக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, 'எஸ்.பி.ஐ.' என்ற பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்குமேல், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க, ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை, எஸ்.பி.ஐ. அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து, எஸ்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பு: ஏ.டி.எம். இயந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும்விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்குமேல் பணம் எடுப்பதற்கு, ஒரு முறை ரகசிய எண்ணைப் பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.
இரவு 8:00 மணி முதல், காலை 8:00 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் போன் எண்ணிற்கு வரும். இது சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் இருந்து, ஏ.டி.எம். வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும். ஜனவரி 1 முதல், நாடு முழுவதும் இது செயல்பாட்டிற்கு வருகிறது.
ஆனால் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள், இதர வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்தால், இந்தப் பாதுகாப்பு முறை பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.💖💖💖💖💖💖💖💖
No comments:
Post a Comment
Please Comment