'குரூப் - 1' தேர்வு: பெண் இன்ஜினியர் அர்ச்சனா முதலிடம்
சென்னை: 'குரூப் - 1' தேர்வில், சிவகங்கையைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி பெண், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசு துறையில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட எட்டு வகை பதவிகளில், 181 காலியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில் முதல் நிலை தேர்வு நடந்தது.
மொத்தம் 2.29 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 9,442 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பிரதான தேர்வு நடத்தப்பட்டு, 363 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வாகினர்.
அவர்களுக்கு, டிச., 23 முதல், 31 வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டதாரி பெண் அர்ச்சனா, மாநிலத்தில் முதல் இடத்தை பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர், ஐ.டி., நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றியவர்.திருமணமான அர்ச்சனா, குரூப் - 1 தேர்வை எழுதிய முதல் முயற்சியிலேயே, மாநிலத்தில் முதல் நபராக தேர்வாகியுள்ளார்.
அர்ச்சனா கூறியதாவது:நாள்தோறும் குறைந்தபட்சம், 10 மணி நேரம் படித்து, இந்த இலக்கை எட்டியுள்ளேன். வேலையை விட்டு விட்டு, முழுமையாக பயிற்சியில் ஈடுபட்டதால், வெற்றி கிடைத்தது. துணை கலெக்டர் பதவியை பெற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி யுரேகா, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
தற்போது, டி.எஸ்.பி., யாக பணியாற்றி வரும் தனலட்சுமி, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மாநில அளவில் முதல் எட்டு இடங்களையும், மாணவியரே பெற்றுள்ளனர். மாநில தேர்தல் அதிகாரி பழனிசாமியின் மகன் மித்ரன், 53வது இடத்தை பெற்றுள்ளார்.
20ம் தேதி விண்ணப்பம்அரசு பணியில், குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை, 2020 ஜனவரியில் வெளியாகும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட ஆண்டு தேர்வு கால அட்டவணையில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி, இந்த தேர்வுக்கு, வரும், 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், பிப்., 19 வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, முழு விபரங்களுடன் கூடிய அறிவிக்கை, வரும், 20ம் தேதி வெளியாக உள்ளது.
'Group-I' Examination: Female Engineer Archana tops the list:
Chennai: In Group 'I''Sivaganga Engineering Graduate-Woman' tops the 'Status' Group - 1 In March 2019, the first level examination was held to fill 181 vacancies in eight posts, including Deputy Collector, DSP, in the Government of Tamil Nadu. Out of a total of 2.29 lakh candidates, 9,442 passed the exam.
For them, the main exam was conducted and 363 people were selected for the interview. They had interviews from Dec. 23 to 31. The results were announced yesterday. Archana, a graduate from Sivaganga district, has won the first place in the state.
He is the first person in the state to be selected in the first attempt to write the Group-I exam. Archana said: I have achieved this goal by reading for at least 10 hours daily. Quitting the job and practicing fully was a success. "I would like to get the post of Deputy Collector," he said.
Currently, Dhanalakshmi, who works as a DSP, ranks third in the state. The top eight are statewide and the students are the highest ranked. Mithran, the son of state election officer Palanisamy, is ranked 53rd.
The Annual Examination Schedule released by the Tamil Nadu Government Employee Select Committee, DNPSC, stated that the application for the Group-I Examination will be released on January 20, 2012.
Accordingly, it has been announced that this application will be applied from the 20th to the 20th of this year and the application deadline will be given till 19th February. The full announcement, with full details, will be released on the 20th.

No comments:
Post a Comment
Please Comment