டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் !
கடந்த செப்டெம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அதாவது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில்
மரபு, பண்பாடு, சமூக - அறிவியல் இயக்கங்கள், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தது. தமிழ் தெரியாதவர்கள் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கும் அதே பாடத்திட்டம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.குரூப் 1ல் வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் குறைக்கப்பட்டு, தமிழ் முக்கியத்தூவைத்தை அதிகரித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பாடத்திட்டத்தில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 1 தேர்வுக்கும் குரூப் 2 தேர்வுக்கும் கிட்டத்தட்ட ஒரே பாடத்திட்டம் என்பதால் தேர்வெழுதுவோர் இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்கலாம்.
மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டங்கள் ஏதும் மாற்ற, செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Curriculum for TNPSC Group I Examination Changed
Curriculum for the Tamil Nadu Government Employees Examination Board Group 2 and 2A last September. That is, it has added subjects such as tradition, culture, socio-scientific movements, history of Tamil Nadu and development of Tamil Nadu with emphasis on Tamil language.
Tamils were not able to pass the exam. In this case, the Tamil Nadu Government Employee Terminal has declared that Group 1 is the same curriculum of choice. That is, the curriculum and the Sangam literature are included in the curriculum.
Thus, since the Group 1 and Group 2 exams are virtually the same curriculum, the examiner can take both exams. In addition, it has been reported that no changes have been made to the DNBSC Group 1 Primary Examination syllabus.
No comments:
Post a Comment
Please Comment