ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்வு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு பவுன் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
இதனால் நகை வாங்குபவர்கள் கவலை அடைந்தனர். அதன் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைவதும் பின்னர் சிறிது உயர்வதுமாக இருந்தது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது.
சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3736-க்கும், ஒரு பவுன் ரூ. 29 ஆயிரத்து 888-க்கும் விற்பனையானது.இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.3,793 ஆகவும், பவுனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.30,344 ஆகவும் அதிகரித்துள்ளது.
3 மாதங்களுக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ.30ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.40-ல் இருந்து 70 காசுகள் உயர்ந்து ரூ.51.10-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.50 ஆயிரத்து 400-ல் இருந்து ரூ.700 அதிகரித்து ரூ.31 ஆயிரத்து 400-க்கு விற்கப்படுகிறது.தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்ததற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததே காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்தது. இதன் தாக்கம் தங்கத்தின் விலையிலும் ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தங்கம் விலை இனி குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
The cost of jewelery is Rs.456
The price of gold in India has fluctuated due to changes in gold prices in the international market. After that, gold prices gradually decreased and then rose slightly. Gold prices, which had fallen slightly from the New Year, rose sharply today.
3736 per gram in Chennai yesterday and Rs. On the same day, it rose by Rs 57 to Rs 3,793 and Rs 456 per pound to Rs 30,344. After 3 months, the price of gold has again reached a new high of Rs. The price of silver has gone up today.
The price of a gram of silver goes up from Rs.50.40 to 70 cents. The price of crude oil in the international market is the reason for this, jewelers said. Crude oil prices in the international market rose sharply today due to the US military offensive in Iraq.
The impact has also created an uptick in gold prices. It is said that the Pongal festival is coming up in 10 days and the gold price is no longer low.

No comments:
Post a Comment
Please Comment