சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு
நாகர்கோவில், ஜன.30: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
8ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரையும், 5ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்வில் சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் அரசு பொதுத்தேர்வு நடத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்எஸ்டிசி, என்ஆர்எஸ்டிசி சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளி செல்லா,
இடைநின்ற குழந்தைகள் அனைவரும் இப்பொதுத்தேர்வை எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த இந்தி, பெங்காலி, ஒடியா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இதர மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இம்மாணவர்களும் இந்த பொதுத்தேர்வை அவர்தம் தாய்மொழியில் அல்லது அவர் விரும்பும் மொழியில் எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுந்த முன்னேற்பாடுகளை தேர்வு துறை மூலம் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5th and 8th grade general election for children studying in special training centers
NAGARCOIL, Jan 30: The Department of School Education has ordered that all classes of Tamil Nadu students in grades 5 and 8 should be held from 2019-2020. Elections for Class 8 will begin on March 30 and continue till April 17, and Class 5 will be held from April 15 to April 20.
The State Program Director of Combined School Education has sent a circular to all District Primary Education Officers asking that schoolchildren, nonparticipants, fifth and 8th grade students who are studying in special training centers to take the exam.
The order states: The government has issued an order to hold general elections for students in grades 5 and 8. Accordingly, all school children and non-school children attending the special training centers of the RSTC and NRSTC should immediately upload the details to the Academic Information Management website.
Students from other states of Hindi, Bengali, Odia, Telugu, Malayalam and other languages are also studying in these specialized training centers.
The Principal Education Officers are requested to make appropriate preparations through the selection department so that they can write this general election in their own language or in the language of their choice. Thus stated in the order.

No comments:
Post a Comment
Please Comment