கல்லூரி உதவி பேராசிரியர் தகுதி தேர்வு: 60 ஆயிரம் பேர் தேர்ச்சி
சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு(நெட்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தகுதித் தேர்வு எழுதிய 60 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள பல்கலைக் கழக மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த தேசிய தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது.
தகுதித் தேர்வில் பங்கேற்க 10 லட்சத்து 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் எழுதினர். இதற்காக நாடு முழுவதும் 219 நகரங்களில் 700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 81 பாடங்களில் இருந்து தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.
தேர்வு மையங்களில் 1450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
தேர்வுக்கான விடைக்குறிப்புகள் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது.
அதில் 60 ஆயிரத்து 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் http://ugcnet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
College Assistant Professor Eligibility Examination: 60 thousand students passed
Chennai: 60 thousand people have passed the National Aptitude Test (NET) results for the College Assistant Professorship. There are 60 thousand candidates who have written the qualifying exam. If you want to serve as an assistant professor at universities and colleges in the country, you have to pass the National Qualification Examination conducted by the University Grants Committee.
This national qualification examination is conducted annually by the National Selection Agency. This selection is conducted twice a year. This year's qualifying exam was held from 2nd to 6th. 10 lakh 34 thousand people applied for the qualifying examination. A total of 7 lakhs 93 thousand people wrote.
To this end, 700 choice centers have been set up in 219 cities across the country. Questions of choice were asked from 81 subjects. 1450 CCTV cameras were fitted and monitored at the selection centers. Answers to the selection were recently posted on the website.
Following this, the National Selection Agency released the results of the night exam yesterday. Of these, 60 thousand 147 passed. More information can be found at http://ugcnet.nta.nic.in.

No comments:
Post a Comment
Please Comment