தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு
பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில் சென்னையில் பல பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையை நேரடியாக மாணவர்கள் பார்த்து பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார்.
அவருடைய பேச்சை தமிழில் மொழிமாற்றம் செய்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து சொல்ல பல பள்ளிகளில் மொழி பெயர்ப்பாளர்கள் வைக்கப்பட்டனர்.
சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுபலட்சுமி, காவியா ஆகிய மாணவிகள் பிரதமர் மோடியின் உரையை மொழி பெயர்த்தனர். இதை பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டு பயன்பெற்றனர்.
பிரதமர் மோடியின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
Please Comment