தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் காரைக்கால் மாணவியின் ஆய்வு திட்டம் தேர்வு
புதுச்சேரி:கேரளாவில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், காரைக்கால் மாணவியின் ஆய்வுத்திட்டம் தேர்வு செய்யப்பட்டது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் 31 வரை, 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
மாநாட்டை, கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். எம்.பி., சசிதரூர் முன்னிலை வகித்தார்.மாநாட்டில், நாடு முழுவதும் இருந்த 657 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்று, தங்களின் ஆய்வுத்திட்டங்களை சமர்ப்பித்தனர்.
இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பிராந்தியங்களில் இருந்து 6 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இவர்களுடன், வழிகாட்டி ஆசிரியர்கள் இருவர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் ஆகியோர் சென்றனர்.
மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு திட்டங்களில் சிறந்ததாக, 19 ஆய்வு திட்டங்களை தேசிய கல்விசார் குழுமத்தின் தலைவர் ரகுநாதன் அறிவித்தார்.
இதில், காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளி மாணவி மதுஷாலினி சமர்ப்பித்த மண்பானை பாசனத்தை பயன்படுத்தி விதை முளைப்பு பற்றிய ஆய்வு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டு குழந்தை விஞ்ஞானிகளை பாராட்டி பேசினர்.
விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய முன்னாள் இயக்குனர் சந்திரதத்தன், குழந்தை விஞ்ஞானிகளுக்கு பதக்கம் வழங்கினார்.
Karaikal Student's Study Program at National Children's Science Conference
Puducherry: The 27th National Children's Science Conference was held from the 27th to the 31st of last month in Thiruvananthapuram, Kerala. The conference was inaugurated by Kerala Chief Minister Pinarayi Vijayan.
At the conference, 657 child scientists from all over the country participated and submitted their proposals. 6 child scientists from Puducherry, Karaikal and Maki regions participated. With this, two mentor teachers, state coordinators Shekhar and Ravichandran visited.
The study of germination Irantat elected, the Vice-President Venkaiah Naidu certificate valankappattatuniraivu ceremony, Arif Mohammad Khan was governor of the state of Kerala participated's scientists were present. Chandradathan, former director of the Vikram Sarabhai space station, awarded the medal to child scientists.

No comments:
Post a Comment
Please Comment