கல்வி செய்திகள் 30/01/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி செய்திகள் 30/01/2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 தை 16 ♝ &*   
30.01.2020


🔥
🛡5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மதுரை  உயர்நீதின்றத்தில் மனு தாக்கல்.

🔥
🛡அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும் -  கல்வித்துறை உத்தரவு

🔥
🛡8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கிடையாது என தொடக்கக் கல்வி  இயக்குநர் தகவல் 

🔥
🛡அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநலநிதி வைப்பு நிதிக் கணக்குகள் தணிக்கை செய்யாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர்களின் விபரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡ஜூன் மாதம் முதல் ஜுலை மாதம் வரை வீட்டு பட்டியல் கணக்கெடுப்பும், அடுத்த  ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும் - அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்த அனைத்து ஏற்பாடும் முழுவீச்சில் நடைபெறுகின்றது.

🔥
🛡பொதுத்தேர்வு எழுத உள்ள  மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.

🔥 
🛡கடந்த நவ.17,30 & டிச.1 இல் நடைபெற்ற கணினி இயக்குபவர்,  இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து - 
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு. 

🔥
🛡விண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு!' - இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம் . எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு மட்டும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
விண்ணப்பிக்க விரும்புவோர் இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளமான www.isro.gov.in சென்று விண்ணப்பிக்கலாம். 

🔥
🛡அமெரிக்கா  ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு 

🔥
🛡அரசின் சார்பில் நடைபெறும் இலவச திருமண திட்டத்தில் மணப்பெண்களுக்கு மேக்கப் போட  ஆசிரியர்களை நியமித்த உத்திரப்பிரதேச அரசு -  அதிர்ச்சியில்  அரசு ஆசிரியர்கள் 


*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment