*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மார்கழி 17 ♝ & 02•01•2020*
🔥
🛡உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது : வாக்கு எண்ணிக்கை நிறைவடைய நள்ளிரவு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥
🛡அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு, முழு வேலை நாளாக செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு - நாளிதழ் செய்தி
🔥
🛡மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு TRB தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.
🔥
🛡குரூப் 1 பதவிக்கு 6ம் தேதி கலந்தாய்வு - TNPSC அறிவிப்பு
🔥
🛡திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு திருவிழா நடப்பதை முன்னிட்டு ஜனவரி 6 ஆம் நாளன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
🔥
🛡ஸ்ரீஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08 . 01 . 2020 - ஆம் நாளன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (02.01.2020) கல்லூரி,பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன.
🔥
🛡அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:
Post a Comment
Please Comment