அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி

அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி 

இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாரா கும் இளைஞர்களுக்கு தேவை யான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந் தோறும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையங்களில், தன்னார்வ பயி லும் வட்டங்கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இப் பயிற்சி வகுப்புகளில் தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகை கள் ஆகியவை பராமரிக்கப் படுவதுடன், மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவை யும் இலவசமாக நடத்தப்படு கின்றன. தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர் களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர் களும் பயன்பெறுவதற்காக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (http://tamilnaducareerservices.tn.gov.in) செயல்பட்டு வருகிறது. 

இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் -7பி, 8, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பு கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பாடக் குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இந்த வலைதளத்தை செல் போன் மூலமாகப் பயன்படுத் துவதற்காக ஒரு செல்போன் செய லியும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (http://tamilnaducareerservices.tn.gov.in) தர விறக்கம் செய்து தமது செல் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகளைத் தத்தமது செல்பேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க முடியும். 

 எனவே, அரசுத் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் இந்த இணைய தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து இந்த வலைதளத் தின் சேவைகளை இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The cell phone processor can help train those who want to join the government sector

In a statement released yesterday, Director of Employment and Training VV Vishnu said: Crop Circles are in operation. There are free workshops for various competitive exams such as TNPSC, TNUSRP, SSC, IPPS and RRB. 

Studies for exams, books, newspapers and magazines are maintained in these workshops and sample exams and sample interviews are provided free of charge. The Virtual Learning website (http://tamilnaducareerservices.tn.gov.in) is run by the Department of Employment and Training, for the benefit of young people who are inaccessible and living in the services of the Volunteer Learning Circle. A remote countryside. This website is TNPSC Group-1, Group-2, Group-7B, 8, TNUSRP, SSC, IPP. Has uploaded references to competitive selections such as S and RRP. Also, classes related to these specifications are uploaded in audio and video format. A website has also been developed to use the site with a cell phone. 

By installing this function 
(http://tamilnaducareerservices.tn.gov.in) on their cell phone, registrants can read the course material for the competitive exams loaded on this virtual learning web site.

Therefore, youths who are working in the government sector are asked to register their name on this website and get the services of this website free of charge. Thus stated in the press release.

No comments:

Post a Comment

Please Comment