வரலாற்றில் இன்று 04/01/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 04/01/2020

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾*


          _*🌹சனிக்கிழமை 🌹*_

 *✍பதிவு நாள்: 04-01-2020*



*கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.*_

*🔵நிகழ்வுகள்*

🖌1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.

🖌1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.

🖌1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.

🖌1649 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.

🖌1717 – நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.

🖌1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.

🖌1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.

🖌1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

🖌1878 – சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.

🖌1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]

🖌1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

🖌1912 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

🖌1918 – பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.

🖌1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.

🖌1951 – கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

🖌1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.

🖌1958 – முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

🖌1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.

🖌1966 – பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

🖌1976 – வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றன. இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

🖌1987 – அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

🖌1990 – பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.

🖌1998 – அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

🖌2004 – இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

🖌2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

*🔵பிறப்புகள்*

🖌1643 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/27)

🖌1785 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர், மொழியியலாளர் (இ. 1863)

🖌1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1852)

🖌1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1897)

🖌1889 – பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (இ. 1963)

🖌1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் (இ. 1960)

🖌1904 – எஸ். எஸ். வாசன், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 1969)

🖌1940 – பிறையன் ஜோசப்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்

🖌1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி

🖌1954 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. 2018)

🖌1963 – மே-பிரிட் மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்

🖌1964 – பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

🖌1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்

*🔵இறப்புகள்*

🖌1904 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)

🖌1908 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்க வானியலாளர் (பி. 1834)

🖌1929 – சேசாத்திரி சுவாமிகள், தமிழக சித்தர் (பி. 1870)

🖌1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1859)

🖌1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

🖌1961 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1887)

🖌1965 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (பி. 1888)

🖌1974 – அண்ணல் தங்கோ, தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1904]])

🖌1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)

🖌1976 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1895)

🖌1994 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழகத் தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1913)

🖌1994 – ஆர். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1939)

🖌2004 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1917)

🖌2005 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கை சட்டத்தரணி, தமிழ் ஆர்வலர், தொழிற்சங்கவாதி (பி. 1920)

🖌2010 – சுடோமு யாமகுச்சி, சப்பானியப் பொறியியலாளர் (பி. 1916)

🖌2017 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (பி. 1927)

*🔵சிறப்பு தினம்*

🖌தியாகிகள் தினம் (காங்கோ சனநாயகக் குடியரசு)

🖌விடுதலை தினம் (மியான்மர், ஐக்கிய இராஜியத்திடம் இருந்து, 1948)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment