*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மார்கழி 24 ♝ &*
09.01.2020
🔥
🛡 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு - விண்ணப்பிக்க நேற்றுடன் முடிவடைந்த நிலையில் விண்ணப்பம் 21.01.2020 வரை நீட்டிக்கப்பபட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் உத்தேச நாள் ; 15-02-2020 & 16-01-2020
🔥
🛡நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
🔥
🛡2019-ம் ஆண்டு பிப்.,25-ம் தேதி மாநகராட்சி அமைப்புகளுக்குட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை உணவாக, இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துவருகின்றது. - நாளிதழ் செய்தி
🔥
🛡ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி படிப்பை தேர்வு செய்யும் வகையில், அவர்களுக்கு விருப்பமறிதல் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
🔥
🛡தர்மபுரி மாவட்டத்தில் போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்த பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡தமிழ்நாடு மேல் நிலைக் கல்விப் பணி – 2020 - 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் (அனைத்து பாடங்களுக்கும்) பற்றிய உத்தேச மதிப்பீடு கோருதல் – தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
🔥
🛡பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் ஜன.10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
🔥
🛡தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்வேறு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10/01/2020 முதல் விண்ணப்பிக்கலாம்
எனவும் அறிவிப்பு.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:
Post a Comment
Please Comment