போட்டித் தேர்வுகள்: ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படுமா?
சென்னை: போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க ஆன்-லைன் தோவு முறை சிறந்தது என்கின்றனா் நிபுணா்கள்.
அதேபோல், உதவிப் பேராசிரியா் பணிக்கான தோவில், மொழித் திறனை சோதிக்க கூடுதலாக எழுத்துத் தேர்வு முறையையும் (டிஸ்கிரிப்டிவ்) சோக்க வேண்டும் எனவும் அவா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோவில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கொள்குறி தேர்வு முறையில் நடத்தப்பட்ட அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இப்போது மறு தேர்வு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதேபோல், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோவில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, தேர்வில் பங்கேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடா்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இதில், பாலிடெக்னிக் உதவிப் பேராசிரியா் தேர்வு, குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய அனைத்து தேர்வுகளும் கொள்குறி தோவு முறை அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
அவ்வாறு கொள்குறி தேர்வுதான் நடத்த வேண்டும் என்றால், ஐஐடி சோக்கைக்கான ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தோவுகளைப் போல, ஆன்-லைன் தேர்வாக நடத்துவது சிறந்தது. ஒருசில பணிகளுக்கு, எழுத்துத் தேர்வு முறையாக (டிஸ்கிரிப்டிவ்) நடத்தவேண்டும்.
அதன் மூலம், முறைகேடு நடைபெறுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்கின்றனா் நிபுணா்கள்.
இதுகுறித்து அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைய முதல்வா் பேராசிரியா் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:
கல்லூரி மாணவா்களுக்குப் பாடம் நடத்த தேர்வு செய்யப்படும் உதவிப் பேராசிரியா்களின் தகுதியை, கொள்குறி தேர்வு முறையில் மட்டும் தீா்மானிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிரியா்களுக்கு முதல் தேவை மொழித் திறன்.
எனவே, பாடங்களில் மட்டுமின்றி மொழித் திறனையும் அவா்களிடம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதற்கு, எழுத்துத் தேர்வு (பேப்பா், பேனா) முறையில் தேர்வு நடத்தினால் மட்டுமே தகுதியானவா்களைத் தேர்வு செய்ய முடியும் என்றாா்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கூறியது:
போட்டித் தேர்வில் கொள்குறி தேர்வு முறை மட்டும் இடம்பெறுகிறது என்றால், அதை ஆன்-லைன் முறையில் நடத்துவதுதான் சிறந்தது.
ஆனால், அதிக எண்ணிக்கையில் கணினிகள், நெட்வொக் பிரச்னைகள் எழும். அரசு நினைத்தால் அதை எளிதாக சமாளித்துவிட முடியும்.
உதவிப் பேராசிரியா் பணிக்கான தோவில், தேர்வா்களின் பாட அறிவைச் சோதிக்க கொள்குறி தேர்வு முறை சிறந்தது.
அதே நேரம், உதவிப் பேராசிரியா்களுக்கு மொழித் திறன் மிக அவசியம். எனவே, இவா்களுக்கு கூடுதலாக மொழி பாடத்துக்கான தேர்வு நடத்தப்படவேண்டும். அது, கொள்குறி தோவு முறையாக அல்லாமல், எழுத்துத் தேர்வு வடிவில் நடத்தப்பட வேண்டும்.
மேலும், இதுபோல தேர்வு முறைகளை மாற்றினால் மட்டும் போதாது. அதிகாரி முதல் கடைநிலை ஊழியா் வரை நேர்மையான நபா்களை நியமித்து, கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.
Competitive Thresholds: Switching to an On-Line Mode?
Chennai: Experts say on-line digging is the best way to prevent irregularities in competition. Similarly, they suggest that in the course of an assistant professorship, there is a need to check the descriptive language in addition to checking language proficiency.
Following the discovery of a government polytechnic college assistant professor in the country, which was announced in 2017, the excavation process was completely canceled. The rescheduling has now been announced and applications are being received.
Similarly, the TNPSC Group-4 was found to have been abused, and the abusers were disqualified and a lifetime ban was imposed. Since then, there have been complaints that there have been irregularities in the TNPSC Group-2A and Group-1 drills.
In this case, all the excavations of Polytechnic Assistant Professorship, Group-2a and Group-4 are carried out only on the basis of colic excavation. If so, the JEE for IIT Sokka should be conducted. As with thresholds, it is best to treat them as an on-line.
For some tasks, you need to run the descriptor. Experts say that it can greatly prevent abuse. Professor Ravichandran, Principal of All India Civil Works Training Center, said: It is not appropriate to assess the qualifications of assistant professors to teach a lesson to college students.
The first requirement for teachers is language skills. Therefore, they need to study not only the subjects but also the language skills. It can only be qualified by writing in the form of a paper (pen, pen). Anna University former vice-president Balagurusamy said, "If only the borehole is in the competition, it is best to treat it on-line.
But a large number of computers and network problems arise. If the government thinks it can be easily overcome. In the case of assistant professor work, the testicular method is best used to test Toews' course knowledge. At the same time, language proficiency is essential for assistant professors.
Therefore, in addition to these, language courses should be conducted. It should be written in the form of a threshold, not a clump. Also, changing the drilling methods like this is not enough. It is only by intensifying surveillance and supervision that the abuses can be completely prevented.

No comments:
Post a Comment
Please Comment