மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்




அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் போராட்டத்தால் 1988ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டது. 1996ல் அடிப்படை சம்பளம் 4,500 ஆனது.

2006 ஜனவரில் மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் என அறிவித்து 1.86- ஆல் பெருக்கி அதை அடிப்படை சம்பளம் எனவும், தர ஊதியமும் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் ரூ.13,500 என மத்திய அரசு வழங்கியது. ஆறாவது சம்பளக் குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை சம்பளத்தில் ரூ.5,750 வரை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 7 வது சம்பளக்குழுவில் ரூ.20 ஆயிரம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2006 ஜனவரி வரை தேர்வு நிலை, சிறப்பு நிலை சம்பள நிர்ணயம் செய்யும் போது சம்பள உயர்வு அளித்து தனி ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. இதே நடை முறையை பின்பற்றவேண்டும். 

பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய பணியிடத்தில் பெற்ற சம்பளத்தை விட குறையும் சூழலில், கடந்த சம்பளக் குழுவில் இழப்பு சரி செய்யப்பட்டது.

இதேபோல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பள இழப்பை சரி செய்ய வேண்டும். 

இவ்வாறு குறைதீர் குழு நீதிபதியிடம் வேண்டு கோள் வைத்துள்ளோம், என்றனர்.

Central Government Employees Parallel: Teachers Alliance Request 

They said: In 1988, the salary of the intermediate teachers was fixed at Rs. In 1996, the base salary was 4,500. In January 2006, the federal government declared a salary equal to 1.8 and multiplied it by 1.86 and gave it a base salary. 


The median teacher salary was fixed at Rs 8,000. In the sixth salary group, the median teacher suffered a base salary of up to Rs 5,750. Currently the 7th pay group has been affected up to Rs. 20 thousand. You should follow this same pattern. 

In the event of a reduction in the salary of the promoted teachers in the previous workplace, the loss in the last salary group should be corrected. We have appealed to the Judge of the Ombudsman Committee.

No comments:

Post a Comment

Please Comment