இன்றைய கல்வி செய்திகள் 03/01/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய கல்வி செய்திகள் 03/01/2020

இன்றைய செய்திகள்
3.01.2020(வெள்ளிக்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
🍒🍒10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு அவசியம்: சிபிஎஸ்இ
🍒🍒NTSE திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அவகாசம்
🍒🍒மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் 2402 பேருக்கு 3 நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
🍒🍒குடியுரிமை சட்டம் தொடர்பாக முடிவுகள் எடுக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, மாநில சட்டப்பேரவைகளுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது-மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்
🍒🍒நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 6 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
🍒🍒இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🍒🍒சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
🍒🍒இந்திய அணி முழுத்திறமையை பயன்படுத்தி விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற முடியும்- கங்குலி
🍒🍒அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது:தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.                          🍒🍒வாக்காளர் பட்டியல்-சிறப்பு பணி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் குறிப்பாக 01.01.2020 தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல் தொடர்பாக எதிர் வரும் 04.01.2020,05.01.2020, 11.01.2020 மற்றும் 12.01.2020 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது
🍒🍒பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் 'தத்கல்' முறையில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்.
🍒🍒மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு.
🍒🍒நீட்' தேர்வு மதிப்பெண்ணில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை - மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை.
🍒🍒நெட் தேர்வு முடிவு வெளியீடு : 60147 பேர் உதவிப்பேராசியர் பணிக்கும், 5092 பேர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி பெற்றதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
🍒🍒அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்
🍒🍒தொலைநிலைப் படிப்புகளை வழங்க சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுமதியளித்துள்ளது.
🍒🍒தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம்  பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
🍒🍒அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜனவரி 6,7இல் மாநில அளவிலான உண்டு உறைவிட கருத்தாளர்  பயிற்சி - SCERT இயக்குநர் உத்தரவு.
🍒🍒மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
🍒🍒தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகளை பாா்வையிடச் செல்லும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அங்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 
🍒🍒செல்போன் தொலைந்துவிட்டால் அதை பிளாக் செய்யும் வசதி -  மத்திய தொலைத்தொடர்பு துறை அறிமுகம் : தற்போது டெல்லியில் மட்டும் உள்ள இந்த சேவை விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படும்.
🍒🍒மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
🍒🍒க‌கன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்ட வீர‌ர்களுக்கான பயிற்சி ஜனவரி 3ம் வாரம் தொடங்கும்.
- இஸ்ரோ தலைவர் சிவன்
🍒🍒6,029 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்: ஆசிரியா்களுக்கு ஜனவரி 6-இல் பயிற்சி தொடக்கம்
🍒🍒8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு: புதிய பாடநூல்கள் வெளியீடு
🍒🍒"ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் "-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி                                                    🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, நாளை சனிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

👉தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ஆம் தேதி அரையாண்டுத் தோ்வு முடிவடைந்தது. இதையடுத்து, டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை எனவும் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-இல் நடைபெறுவதால், விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது.
எனினும் ஜன.2-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப்பிறகு மறுநாளில் பணிக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்குப் பிறரும் நீடிக்கும் என்பதால் ஆசிரியா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை, அரையாண்டுத் தோ்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவித்தது.
இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 11 நாள் விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட்டு மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்குகின்றன.
இந்தப் பருவத்துக்கான பாடநூல்கள் ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, விடுமுறை முடிந்து சனிக்கிழமை பள்ளிகளுக்குச் செல்லும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அன்றைய தினமே பாடநூல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹கூகிள் குரோமினால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட் சில சுவாரஸ்யமான அம்சங்களைக் குறித்து இந்தப் பதிவு நமக்கு கூறுகிறது.!

👉கூகிள் குரோம் மிகவும் பிரபலமான உலாவிகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், கூகிள் குரோம் பலவிதமான பயனுள்ள அம்சங்களுடன் உருவாகி வருவதைக் நாம் கண்டு வருகிறோம். அந்த வகையில், இருண்ட பயன்முறை, மேம்படுத்தப்பட்ட தாவல் மேலாண்மை அமைப்பு மற்றும் மீட்டெடுப்புத் தாவல் விருப்பங்கள் போன்ற சில சிறப்பம்சங்களை கூகிள் குரோம் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
👉இதைவிடவும் சில சுவாரஸ்யமான அம்சங்கள் கூகிள் குரோமினால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்களை இந்தப் பதிவு கூறுகிறது.
👉Gesture navigation: பயனர்கள் ஒரு வலைப்பக்கத்திலிருந்து இன்னொரு வலைப்பக்கத்திற்கு சிரமமின்றி செல்ல அனுமதிக்கும் சைகைகளை Chrome அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்களை காட்சியின் இடதுபுறத்திலிருந்து உள்நோக்கி ஸ்வைப் செய்ய அனுமதிக்கிறது. அதைச் செயல்படுத்த, உங்கள் URL பட்டியில் chrome://flags/#overscroll-history-navigation எனத் தட்டச்சு செய்து, அமைப்பு இயக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
👉Google Omnibox: பெரும்பான்மை பயனர்களுக்கு இது குறித்துத் தெரியாது, ஆனால் நாம் வழக்கமாக முகவரி பெட்டியில் இடும் URL-கள், Omnibox மூலம் கூகுள் தேடுபொறியின் நேரடி இடைமுகமாக உறுமாற்றுகிறது. Omnibox-ல் விஷயங்களைத் தட்டச்சு செய்வது கூகிள் முடிவுகளுக்கு நேராக எடுக்கும் என்பதை பயனர்கள் கவனித்திருக்கலாம், ஆனால் Omnibox தான் இந்த கணிதக் கணக்கீடுகளைச் செய்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.
👉இழந்த தாவல்களை மீட்டெடுப்பது (Recovering lost tabs): தற்செயலாக உங்கள் எல்லா தாவல்களையும் ஒரே நேரத்தில் மூடும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?.. இதற்காக தான் Chrome ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் தற்செயலாக மூடிய எந்த பக்கத்தையும் மீண்டும் திறக்க அனுமதிக்கிறது. இதனைச் செய்ய பயனர்கள் விண்டோஸில் Control+Shift+T பொத்தானை அழுத்த வேண்டும். இல்லையெனில் தாவலின் முனையில் உள்ள ‘+’ அடையாளத்தை வலது கிளிக் செய்து, ‘மூடிய தாவலை மீண்டும் திற’ விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் தற்செயலாக மூடிய தாவல்களை மீண்டும் திறக்கலாம்.
👉Dark Mode: கூகிள் குரோமில் உள்ள டார்க் பயன்முறை 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது, இது கண்களில் குறைவான கடினத்தன்மை மட்டுமல்ல, OLED பயனர்களுக்கு பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கிறது. இந்த முறைமையை இயக்க விண்டோஸுக்குச் சென்று Settings > Appearance-ல் கருப்பொருளை “Material Incognito Dark Theme” என்று சரி செய்ய வேண்டும். இருண்ட பயன்முறை Mac OS 10.14 மற்றும் அதற்கு மேல், விண்டோஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களில் கிடைக்கிறது.
👉Muting sites: பாப்அப் விளம்பரங்களும் தேவையற்ற சத்தமும் இணையத்தில் உலாவலை திசை திருப்பும். எனவே இந்த சத்தங்களை கட்டுப்படுத்து விதமாக, ஆடியோ இயங்கும் தளங்களுக்கான தாவல் தலைப்பில் Chrome ஒரு சிறிய ஸ்பீக்கர் ஐகானைக் கொண்டுள்ளது. பல திறந்த தாவல்களில் சத்தத்தை உருவாக்கும் தளங்கள் எது என்பதை ஒருவர் விரைவாகச் சரிபார்த்து, தாவலை வலது கிளிக் செய்து Close Window-வினை கிளிக் செய்யலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment