"அதைமட்டுமாவது திருப்பிக் கொடுத்துடுப்பா" திருடனுக்கு ஆசிரியர்கள் எழுதிய உருக்கமான கடிதம்!
கேரளாவில் அரசு உதவிபெறும் பள்ளியில் திருடிய திருடனுக்கு ஆசிரியர்கள் இணைந்து உருக்கமான கடிதம் எழுதியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.கேரளாவில் உள்ள தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது.
இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதோடு 40-க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணமும், கேமரா உள்ளிட்ட சில மின்னணு பொருட்களும் திருடுபோயின.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் திருடன் யார் எனத் தெரியவில்லை.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இந்த முறை திருடன் 2 லேப்டாப்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில பென்டிரைவ்களையும் திருடிச் சென்றுள்ளான். இந்தமுறை, இந்த திருட்டு காரணமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ஆசிரியர்கள் அந்தத் திருடனுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தின் விவரம்
"அன்புள்ள திருடனுக்கு, நீ மீண்டும் பள்ளிக்கு வந்து திருடியது மோசமானது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பும் நீதான் எங்கள் பள்ளியில் திருடியிருப்பாய் என நினைக்கிறோம்.
அப்போது 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மாணவர்களுக்காக வாங்கி வைத்திருந்த கேமராவையும் திருடி சென்றுவிட்டாய். போலீசில் புகார் அளிக்கப்பட்டும் அவர்களால் உன்னை கைது செய்ய முடியவில்லை. இந்த முறை நீ சில முக்கிய பொருட்களை திருடிச் சென்றுவிட்டாய்.
கண்காணிப்புக் கேமராவில் உன்னுடைய காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால் ஹார்ட் டிஸ்கை(Hard Disk) திருடி சென்றதோடு, உனக்குப் பயன்படாத எங்கள் டிஜிட்டல் கையெழுத்து அடங்கிய பென்டிரைவ்களையும்(Pen Drive) திருடியுள்ளாய்.
அது இல்லாமல் எங்களுக்கு சம்பளம் கிடைக்காது. எங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு மருந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு இருமடங்கு வட்டி அபராதமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
உன்னால் மிகவும் சிரமப்படுகிறோம். நீ திருடிய பொருட்களில் அந்த பென்டிரைவ்களை மட்டும் திருப்பி கொடுத்து விடு. பள்ளியில் திருடுவதை விட்டுவிட்டு நல்ல வேலை செய்யக் கற்றுக்கொள்."
இவ்வாறு ஆசிரியர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் இணையதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாதம் சம்பளம் தாமதமாகும் என்பதால் ஆசிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
Teachers' thrilling letter to the thief!
Teachers in Kerala have written an angry letter to a thief who stole a government-run school in Kerala.
More than 600 students study it. In addition, more than 40 teachers are working. Last month, the school stole 40 thousand rupees from the headmaster's room and some electronic items including a camera.
A complaint has been lodged at the police station. It is not yet known who the thief is. In this case, there was a robbery at the school two days ago.
This time the thief has stolen 2 laptops, a hard disk and some Pentrive, reported by surveillance camera footage. This time, the theft has caused problems for teachers.
Impressed teachers have written a furious letter to the thief. Dear Thief, "Dear thief, you returned to school and stole it. We think you have stolen our school for the past 7 months.
Then you have stolen 40 thousand rupees and a camera for students. They have not been able to arrest you even after complaining to the police. This time you steal some important stuff.
Since your footage is recorded on a surveillance camera, you have stolen the hard disk and stolen our unused digital signature pen drives.
Without it we would not get paid. The elderly in our home are unable to afford medicine. Many have a bank loan. They may have to pay twice the interest.
We are so embarrassed by you. Only return those pentacles to the items you stole. Quit stealing at school and learn to do a good job. ”This is what the teachers wrote in the letter.
The article is being published on websites and spreading rapidly. Teachers are upset because salaries are delayed this month.

No comments:
Post a Comment
Please Comment